இலங்கையில் இன்னொரு பீதி- கடல்பாம்புகள் படையெடுப்பு- சுனாமி அச்சம்!
மட்டக்களப்பு: இலங்கையில் சிவப்பு மழை, விண்கற்கள் விழுதல், நாய்களின் மர்ம மரணம் போன்றவற்றைத் தொடர்ந்து புதிய பீதியாக கடல் பாம்புகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்திருக்கின்றன.
தமிழர் பிரதேசமான இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் நேற்று காலை படையெடுத்திருக்கின்றன. இப்பாம்புகள் 3 அடியிலும் 4 அடியிலும் நீளமாக இருக்கின்றன. இந்தப் பாம்புகளைப் பார்க்க மக்களும் குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில் 2004-ம் ஆண்டு சுனாமிக்கு முதல் வாரமும் இப்படி கடல் பாம்புகள் படையெடுத்ததாகக் கூறப்படும் தகவலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!