ஈக்வடாரில் எரிமலை குமுற தொடங்கியது: மக்கள் வெளியேற்றம்
ஈக்வடார் நாட்டில் எரிமலை குமுற தொடங்கி உள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், துங்குரகுவா என்ற இடத்தில் உள்ள எரிமலை தற்போது குமுற தொடங்கி உள்ளது.
இந்த எரிமலை இரவு நேரத்தில் வழக்கத்தை விட கூடுதலாக நெருப்பை கக்கி வருகிறது.
மேலும் எரிமலை தூக்கி எறியும் சிறிய பாறைகள் மற்றும் சாம்பல், குடியிருப்பு பகுதியில் மண்டிக் கிடக்கிறது.
குறிப்பாக பனோஸ் டி அகுவா சான்டா நகரப் பகுதி முழுவதும் ஒரே சாம்பலாக காணப்படுகிறது. காற்றில் மாசு கலந்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது மக்களை ஈக்வடார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரமுடைய துங்குரகுவா எரிமலையை தவிர, ஈக்வடார் நாட்டில் மேலும் 7 எரிமலைகள் உள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!