நாளை உலகம் அழியலாம் என்ற பயத்தில் சில அமெரிக்க முன்னேற்பாடுகள்!
நாளை (21-ம் தேதி, வெள்ளிக்கிழமை) உலகம் அழியலாம் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதை நம்புவது, நம்பாதது ஒருபக்கம் இருக்கட்டும், “எதற்கும் இருக்கட்டுமே” என்ற முன்னேற்பாடுகள் செய்பவர்கள் ஏராளம்! விஞ்ஞானிகள் உலகம் அழிவதற்கான சாத்தியத்தை, நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் சிரிப்புடன் ஒப்பிடுகிறார்கள். “சான்சே இல்லை”
உலகம் அழியப் போகிறது என்பதை நீங்கள் நம்பும் ஆளாக இருந்தால், இதைப் படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். கடைசி ஆசைகளை நிறைவேற்றுவதில் பிசியாக இருப்பீர்கள். இன்டர்நெட் பார்க்க நேரம் இருக்காது (ஒருவேளை உங்கள் கடைசி ஆசைகளில் ஒன்று அறிவியல் (http://arinjar.blogspot.com/) பார்க்க வேண்டும் என்று இருந்தால், வேறு விஷயம்)
உலகம் அழியப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால், நான் இதை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். எனது ஒரேயொரு கடைசி ஆசையை நிறைவேற்ற கிளம்பியிருப்பேன். “வாழ்க்கையில் ஒரு தடவையாவது பவர் ஸ்டாரை நேரில் பார்க்க வேண்டும்”
எப்படியோ, சிலர் என்னவெல்லாம் முன்னேற்பாடுகள் செய்கிறார்கள் என்பதே, அமெரிக்க மீடியாக்களில் இன்று மெகா டாபிக்காக உள்ளது. இதோ அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள Utah மாநிலத்தில் உள்ள American Fork சிறு நகரத்தில் (ஜனத்தொகை -உலகம் அழிவதற்குமுன்- வெறும் 26,000) சிலர் செய்துள்ள முன்னேற்பாடுகள் இவை.
கீழேயுள்ள போட்டோவில் இருப்பவருக்கு பெயர், ஃபில் பர்ன்ஸ். இவர் அணிந்திருப்பது, காற்றை சுத்தப்படுத்தும் முகமூடி (air purifying SCape Mask) திடீரென மூச்சு முட்டும் அளவுக்கு காற்று மண்டலம் அசுத்தமாகி, மக்கள் இறக்க நேர்ந்தாலும், இதை அணிந்திருந்தால், காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்துக்கு ஏற்றபடி கொடுக்கும். (உலகம் அழியாவிட்டால், சென்னை அண்ணா சாலையில் ஆட்டோவில் செல்லும்போது அணியலாம்)
முதுகில் கொண்டுசெல்லக்கூடிய பேக்பாக் ஒன்றில், வீடு இடிந்தால், அல்லது, இடிபாடுகளுக்குள் சிக்கினால், தேவைப்படும் சிறு உபகரணங்களை இன்றிரவு எடுத்து வைத்திருக்கப் போகிறாராம் இவர்.
Utah மாநிலத்தில் உள்ள நார்த் சால்ட் லேக் என்ற மற்றொரு நகரில் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து, $64,900 பங்கர் ஒன்றை அமைத்துள்ளார்கள். Utah Shelter Systemsல் அமைக்கப்பட்டுள்ள இந்த பங்கர், தற்போதுள்ள கட்டடங்கள் சரிந்து விழுந்தால் தாங்கக்கூடியது.
Utah மாநிலத்தில் உள்ள பொன்டிஃபுல் என்ற மற்றொரு சிறு நகரில், தமது வீட்டுக்கு கீழ் பேஸ்மென்டில் உணவுகளை சேகரித்து, பாதுகாப்பாக வைத்துள்ள இவரின் பெயர், ஹூ வெய்ல்.
Utah மாநிலத்தில் உள்ள பொன்டிஃபுல் நகரில் ஹூ வெய்ல், மரங்களில் இருந்து விறகு வெட்டி சேகரித்து வைத்துள்ளார். (அமெரிக்காவில் விறகு வாங்குவது சுலபமல்ல)
Utah மாநிலத்தில் உள்ள சான்டி என்ற மற்றொரு நகரில் உள்ள American Prepper Network’s warehouseல், சான்டி சிறு நகரில் வசிக்கும் அனைவருக்கும் தேவையான எமர்ஜன்சி கேம்ப் ஸ்டவ்வுகள் தயார் நிலையில் உள்ளனவா என செக் செய்பவரின் பெயர், மைக் பொரென்டா.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!