Tuesday, September 11, 2012

எம்.பி.ஏவுக்கு 'மவுசு' குறைந்தது.. மூடப்படும் கல்வி நிலையங்கள்!


எம்.பி.ஏவுக்கு 'மவுசு' குறைந்தது.. மூடப்படும் கல்வி நிலையங்கள்!






இந்தியாவில் எம்பிஏ பட்டப் படிப்பை அளித்து வரும் கல்வி நிறுவனங்களில் சேருவோரின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் சுமார் 140 கல்வி நிறுவனங்கள் மூடப்படும் சூழல் எழுந்துள்ளதாக கிரிசில் ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.

எம்பிஏவில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 4,000 எம்பிஏ கல்வி நிலையங்கள் உருவாயின. ஆனால், இதில் பெரும்பாலான கல்வி மையங்களில் சுமார் 35 சதவீத இடங்கள் காலியாகவே உள்ளன.

அதிலும் 140 கல்வி நிலையங்களில் மிக மிகக் குறைவானவர்களே சேர்ந்து வருவதால், அவை மூடப்படவுள்ளன.

எம்பிஏ பட்டம் என்ற பெயரில் பெருமளவில் காசு பிடுங்கிக் கொண்டு கல்வி அளித்து வந்த இந்த நிறுவனங்களில் இப்போது சேர ஆளில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி படு வேகமாக இருந்த நிலையில், வேலைவாய்ப்புகளும் மிக அதிகமாக உருவாயின. இதையடுத்து எம்பிஏ பட்டதாரிகளுக்கு தேவையும் அதிகமாக இருந்தது.

ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் இந்த நிதியாண்டில் தான் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிக மிகக் குறைவான நிலையை அடைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் உருவாக்கமும் குறைந்துவிட்டது. இதனால் ஏராளமான பணத்தை செலவிட்டு எம்பிஏ பயின்றாலும் வேலை கிடைப்பது கஷ்டமே என்ற நிலையால், அதில் சேருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் 3,52,000 எம்பிஏ இடங்கள் உருவாயின. இதில் ஐஐஎம்கள் மற்றும் நாட்டின் 20 முன்னணி கல்வி மையங்களில் எம்பிஏ படிப்போர் தான் கேம்பஸ் மூலம் வேலைகளுக்குத் தேர்வாகின்றனர்.

இந்த கல்வி மையங்களிலும் கடந்த 2008ம் ஆண்டில் 41 பேருக்கு கேம்பசிலேயே வேலை கிடைத்தது. ஆனால், 2011-12ம் ஆண்டில் வெறும் 29 சதவீதம் பேருக்கே வேலை கிடைத்துள்ளது.

முன்னணி கல்வி நிலையங்களிலேயே இந்த நிலை என்றால், மற்ற கல்வி நிலையங்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!