அபுதாபியில் பிரமாண்டம்: கட்டிடத்தை சுற்றி சன் ஸ்கிரீன்
அபுதாபியில் பிரமாண்ட கட்டிடத்தை சுற்றிலும் பைபர் கிளாஸ் போர்வை அமைக்கப்பட்டுள்ளது. சூரியன் நகர நகர இந்த போர்வையும் சுற்றிக்கொண்டே இருக்கும். கம்ப்யூட்டர் உதவியுடன் இது இயங்குகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் ‘அல் பாஹர் டவர்ஸ்’ என்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் கண்ணை கூசாமல் இருக்க இதில் பிரத்யேக, பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் போர்வை போல பிரமாண்ட சன் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை விட்டு 6 அடி தொலைவில் இது உள்ளது. காலை அலுவலகம் துவங்கும் நேரத்தில், இந்த சன் ஸ்கிரீன் கிழக்கு பக்கத்தில் இருக்கும். வெயில் உச்சிக்கு ஏற, ஸ்கிரீன் மெல்ல நகர தொடங்கும். மாலை நேரத்தில் மொத்த ஸ்கிரீனும் மேற்கு பக்கம் போய்விடும். இவ்வாறு சூரியனின் இருப்பிடத்துக்கு ஏற்ப கம்ப்யூட்டர் உதவியுடன் சன் ஸ்கிரீன் நகர்கிறது. பைபர்கிளாஸ் பொருளால் இந்த ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது.
கண்ணை கூசாத அளவுக்கு போதிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும். சூரிய ஒளி விழாததால் வெப்பமும் குறையும். இதனால், மின்விளக்கு, ஏசி செலவு கணிசமாக குறையும் என்கின்றனர் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி தந்த ஏய்டஸ் நிறுவன இன்ஜினியர்கள். கட்டிடத்தை சுற்றி போர்வை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பணிகள் சில மாதங்களில் நிறைவடையும் என்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!