Tuesday, September 11, 2012

100 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் கடும் மழை : 3 நாளில் 80 பேர் சாவு


100 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் கடும் மழை : 3 நாளில் 80 பேர் சாவு





பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையில் இதுவரை 80 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கைபர்,பக்துன்கவா மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் வெள்ளம் புகுந்ததில் 1,500க்கும் அதிகமான வீடுகள் நொறுங்கி விழுந்தன. இதில் இதுவரை 80 பேர் பரிதாபமாக இறந்தனர். பஞ்சாபின் முல்தான் நகரில் மின்சாரம் பாய்ந்து சிறுவனும் சிறுமியும் பரிதாபமாக பலியாயினர். சிந்து மாகாணத்தின் ஜகோபாபாத் நகரில் நேற்று 440 மி.மீ. மழை பதிவானது. நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட ராணுவத்தின் உதவியை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!