Wednesday, September 12, 2012

484 ஆண்டுகளாக அணையாமல் ஔிரும் விளக்கு!


484 ஆண்டுகளாக அணையாமல் ஔிரும் விளக்கு! ஆசியாவின் சாதனைப் புத்தகத்தில்!




அசாமில் உள்ள வைணவ மடம் ஒன்றில் கடந்த 484ஆண்டுகளாக அணையாமல் ஒரு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

இது ஆசியாவின் சாதனைப் புத்தகத்தில் சனிக்கிழமை அதிகாரபூர்வமாக இடம்பெற்றது. ஜோர்ஹட் மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிஜோய் கிருஷ்ணாவிடம் இதற்கான சான்றிதழ் ஒப்படைக்கப்பட்டது.

வைணவ மகான்களில் ஒருவரான ஸ்ரீமந்த சங்கரதேவாவின் சீடரான மாதவ்தேவாவால் நிறுவப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க நாம்கார் மடத்தில் கி.பி.1528-ம் ஆண்டு இந்த விளக்கு ஏற்றப்பட்டது. அது இன்றளவும் அணையாது பாதுகாக்கப்பட்டு வருவதுடன் அதன் புனிதம் போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அசாம் மஜூலி தீவில் உள்ள கமலாபாரி வைணவ மடாதிபதி 300ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள "குரு சரித்திர´த்திலும் இந்த விளக்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!