அடுத்த பேரிடி ! பாஸ்வேட்டை மாத்த தயாரா ?
யாஹூ வாய்ஸ் ஹேக்ட்
சில நாட்களுக்கு முன்னர்தான் டி.என்.எஸ் சேஞ்சர் என்னும் வைரஸ் தாக்கி பல லட்சம் கம்பியூட்டர்களை ஆட்டிப்படைத்தது. அதன் புரளி அடங்க தற்போது மற்றும் ஒரு பிரளையம் ஆரம்பமாகியுள்ளது. இன்ரர்நெட்டி உலகில் 2வது இடத்தை வகிக்கும் யாகூ மின்னஞ்சல் சேவையை, ஒரு குழு ஹக் செய்துள்ளது. இவர்கள் யாகூவின் அனைத்து பாதுகாப்பு வளையங்களையும் உடைத்து உள்ளே நுளைந்து, சுமார் அரை மில்லியன்(500,000) பேரின் மின்னஞ்சல் முகவரியையும், அதன் பாஸ்வேட்(இரகசியக் குறியீடுகளையும்) களவாடியுள்ளனர்.
சரி களவாடினாலும் களவாடினார்கள்... அதனை அப்படியே விட்டுவிடவில்லை. தாம் களவாடிய இரகசியக் குறியீடுகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை ஒரு இணையத்தளத்தில் அவர்கள் பிரசுரித்தும் உள்ளார்களாம். இந்த இணையத்தளத்தை எவ்.பி.ஐயினர் உடனடியாக முடக்கிவிட்டனர். இப்ப என்ன செய்வது என்று சிந்திக்கிறீர்களா ? நீங்கள் யாகூவில் மின்னஞ்சல் முகவரிக் கணக்கை வைத்திருப்பவர் ஆயின் உடனடியாக அதன் இரகசியக் குறியீடு மற்றும் இதற்கான கேள்வி, போன்ற அனைத்து செக்குரட்டி விடையங்களையும் மாற்றவேண்டும்.
இதனை யாகூ உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால் அவர்களுக்கு அதுபெருத்த அவமானமாக அமைந்துவிடுமாம் ! ஆனால் அதற்காக நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? இறுதியில் உருளப்போவது எமது தலைதானே. ஏன் வம்பு, யாகூ மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக உங்கள் பாஸ்வேட்டை மாத்துவது நல்லது....
Security firm ESET have carried out a statistical analysis of the leaked passwords and compiled a list of the top ten passwords used, and all of them and weak and easily guessed:
123456 = 1666 (0.38%)
password = 780 (0.18%)
welcome = 436 (0.1%)
ninja = 333 (0.08%)
abc123 = 250 (0.06%)
123456789 = 222 (0.05%)
12345678 = 208 (0.05%)
sunshine = 205 (0.05%)
princess = 202 (0.05%)
qwerty = 172 (0.04%)
This list accounts for more than 1 percent of the passwords leaked.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!