அழகாய் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம் : நாசாவின் புதிய தகவல்
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் கிரேட்டர் ஆகியவை படு அழகாக காட்சி தருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா.
செவ்வாய் கிரகத்தின் வின்டர் சீசனின்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரோவர் விண்கலத்தைச் சுற்றிலும் உள்ள செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுவதும் இதில் காட்சியாகியுள்ளது. நான்கு மாதங்கள் அந்த இடத்தில் ரோவர் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதாவது 2011ம் ஆண்டு டிசம்பர் 21 முதல் 2012 மே 8ம் தேதி வரை இங்கு ரோவர் விண்கலம் நிலை நின்றிருந்தது.
ஒரு புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுமையாக தெரிகிறது. இந்த கிரேட்டரானது 14 மைல்கள் அதாவது 22 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகும். கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ரோவர் விண்கலம். அன்று முதல் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 34.4 கிலோமீட்டர் தூரம் வரை அது பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!