அழிவின் விளிம்பில் பவள பாறைகள், கடல் மீன்கள்: விஞ்ஞானிகள எச்சரிக்கை
இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக 2600 விஞ்ஞானிகள் ஒன்று கூடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, பருவ நிலை மாற்றம் கடலில் தரை பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. கடல் நீர் தொடர்ந்து வெப்பமாக மாறி வருகிறது.
இதனால் இயற்கை சூழ்நிலை மாறி கடலில் உள்ள பொருட்கள் அழியத் தொடங்கி உள்ளன. குறிப்பாக கடல் பாசி, தாவரங்கள், பவள பாறைகள் போன்றவை அழிந்து வருகின்றன.
இவை இருந்தால் தான் மீன்கள் வளர முடியும், உணவும் கிடைக்கும். சூழ்நிலை மாறி வருவதால் மீன்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவையும் அழியும் நிலையில் உள்ளன.
கரீபியன் கடல் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்குள் 1975ஆம் ஆண்டில் இருந்து 85 சதவீதம் வரை பவள பாறைகள் அழிந்து உள்ளன.
அதே போன்று அவுஸ்திரேலிய கடல் பகுதியிலும், பவள பாறை மற்றும் கடல் பாசிகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு கடந்த 50 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டன.
ஆசிய கடல் பகுதியில் இந்தோனேஷியா, மலேசியா, பவுபா நியூகினியா, பிலிப்பைன்ஸ் பகுதியில் கடல் பவள பாறைகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு 30 சதவீத கடல் பாசி தாவரங்கள் அழிந்து விட்டன.
இந்த பகுதியில் 3 ஆயிரம் அரிய வகை மீன்கள் அழியும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து விடும். எனவே இதை காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!