ஆச்சார்யா பள்ளி மாணவர்கள் ஒரே நாளில் 21 உலக சாதனை
ஆச்சார்யா கல்வி நிறுவனம் சார்பில் 150 உலக சாதனைகளை படைக்க திட்டமிட்டுள்ளது. இந்த சாதனையை 12 ஆசிரியர்கள், 138 மாணவ, மாணவிகள் நிகழ்த்த உள்ளனர். இந்த சாதனை நிகழ்ச்சி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினர்.
தேங்காய் திட்டு பள்ளியில் மாணவன் தர்சன் ஜெயின் 12 மணி நேரம் டிரம்ஸ் இசைக் கருவியை வாசித்தலும், உதயபாபு 12 மணி நேரம் கீ போர்ட் வாசித்தலும், மாணவர் ரோகித் காகிதங்களால் உருவாக்கப்பட்ட உலகில் மிக நீளமான சங்கிலியும், மாணவி அங்கிதா குமாரி 10 மணி நேரத்தில் அதிகமான ரோபோக்களை உருவாக்குதல், மாணவன் ஜீவா கைவிரல்களில் அதிகமான இரு சக்கர வாகனங்களை ஏற்றியும், கணபதி விஷ்வா கைவிரல்களை கொண்டு அதிகமான டைல்ஸ்களையும் உடைத்தும், அஸ்வின்குமார் 3 மணி நேரத்தில் அதிகமான முறை ருபி கியு சரி செய்யும் சாதனைகளை படைத்தனர்.
சம்பூர்ணா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவன் பிரசன்னா சாரதி உலகில் மிக அதிகமான நேரம் 9 மணி நேரம் பின்புற ஸ்கேட்டிங் செய்து சாதனையும், மாணவன் கணபதி ஈஸ்வரன் உலகில் அதிக நேரம் ஸ்கேட்டிங் மரத்தான் சாதனையும் நிகழ்த்தினர். நேற்று ஒரே நாளில் 21 மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்கள். இந்த சாதனை நிகழ்ச்சி 24ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!