Tuesday, April 16, 2013

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி- முன்னாள் பஸ் சாரதி!

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி- முன்னாள் பஸ் சாரதி!


தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், சோஷலிச கட்சியை சேர்ந்த நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

வெனிசூலா ஜனாதிபதியாக இருந்த ஹியூகோ சாவேஸ்ன் மறைவை அடுத்து, அந்நாட்டுக்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. 80 சதவிகித மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில், 50.7 சதவிகித வாக்குகள் பெற்று நிகோலஸ் மதுரோ ஜனாதிபதி ஆனார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிக் கேப்ரியல்ஸ் 49.1 சதவிகித வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தலைநகர் கராகாஸில் தமது ஆதரவாளர்களிடையே பேசிய நிக்கோலஸ் மதுரோ, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோ மறைந்த ஹியூகோ சாவேஸின் தீவிர ஆதரவாளர். 45 வயதான நிக்கோலஸ் மதுரோ, அந்நாட்டு துணை ஜனாதிபதியாக இருந்து வந்தார். பஸ் சாரதியாக வாழ்க்கையை தொடங்கிய நிக்கோலஸ் மதுரோ, பின்னர் அரசியலில் ஈடுபட்டு, அந் நாட்டுக்கே ஜனாதிபதியாகியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!