சனியில் மழை பெய்வது எப்படி? உங்களுக்கு தெரிந்திராது.. இவர்கள் அறிவார்கள்!
சனி கிரகத்தில் மழை பெய்வதற்கு, அதைச் சுற்றியுள்ள வளையம் போன்ற பகுதிதான் காரணம் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது: சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தில் இருக்கும் மின்னூட்டப்பட்ட தண்ணீர் மூலக்கூறு அணுக்கள், அக்கிரகத்தின் வளி மண்டலத்தில் மழையாக பெய்கிறது. இந்த மழைப் பொழிவு அக்கிரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.
மழைப் பொழிவு காரணமாக சனிக் கிரகத்தின் மேல் பகுதி வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம், அந்தக் கிரகத்தின் வளையம் போன்ற பகுதிக்கும், அக்கிரகத்தின் வளி மண்டலத்துக்கும் இடையே தொடர்புள்ளதைக் கண்டறிந்துள்ளோம்” என்றனர்.
சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய கிரகமான சனியை சுற்றி அபூர்வமான வளையம் காணப்படுகிறது. இந்த வளையம் முழுவதும் பனித் துகள்களும், சிறு கற்களும், வாயுக்களும் நிரம்பியுள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!