Thursday, December 5, 2013

சர்வதேச சந்தையில் யூரோவை முறியடித்த சீனாவின் யுவான்!

சர்வதேச சந்தையில் யூரோவை முறியடித்த சீனாவின் யுவான்! 




உலகில் அதிகம் புழங்கப்படும் இரண்டாவது நாணயம் என்ற பெருமையை யூரோவிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது சீனாவின் யுவான். 

உலக சந்தையில் பயன்பாட்டு அளவில் இதுவரை யூரோதான் அதிக அளவு பயன்பாட்டில் இருந்தது. அதன் சந்தை பங்களிப்பு 6.64 சதவீதமாகும். 

ஆனால் இதனை முறியடிக்கும் வகையில் சந்தைப் பயன்பாட்டில் 8.66 சதவீதம் எனும் அளவுக்கு யுவான் அல்லது ரென்மின்பி (RMB)யின் சந்தைப் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

இதனை சர்வதேச இன்டர்பேங்க் பைனான்சியல் டெலிகம்யூனிகேஷன்ஸின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய வர்த்தகத்தை தீர்மானிப்பது இன்றைக்கும் அமெரிக்க டாலர்தான். அதன் சர்வதேச பங்களிப்பு 81.08 சதவீதமாகும். 

இப்போதைய நிலவரப்படி, சீனாவின் யுவான்தான் சர்வதேச அளவில் அதிகப் புழக்கத்தில் உள்ள ஆசிய நாணயமாகும். 

சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிக அளவில் யுவானைப் புழக்கத்தில் வைத்துள்ளன. பாகிஸ்தானிலும் யுவான் அதிகம் புழங்குவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இலங்கையும் இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடும்!

 டாலருக்கு நெருக்கடி தரும் அளவுக்கு சர்வதேச பொருளாதாரத்தில் யுவானின் பங்களிப்பை அதிகரிக்கும் வேலையில் தீவிரமாக உள்ளது உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசான சீனா.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!