மனைவிக்கு 15 நாள், லிவ் இன் பார்ட்னருக்கு 15... ஆளுக்கு ஒரு ரூம்.. லோக் அதாலத் அதிரடி தீர்ப்பு!
ம.பி.: மனைவிக்கு 15 நாளும், லிவ் இன் பார்ட்னருக்கு 15 நாள் என்றும் ஒதுக்கி இருவரையும் சம அளவில் பாவிக்குமாறு மத்தியப் பிரதேச மாநிலலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அங்குள்ள லோக் அதாலத் கோர்ட் அறிவுரை கூறியது சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லிவ் இன் உறவுகளில் தவறில்லை, அதை 8 நெறிமுறைகளுடன் கடைப்பிடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு வினோதமான வழக்கில் வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளது லோக் அதாலத் நீதிமன்றம்
மனைவி, மற்றும் லிவ் இன் பார்ட்னருடன் வசிக்கும் ஒரு நபரை, இருவரையும் சமமாக பாவிக்குமாறும், சமமாக நேரம் ஒதுக்கிக் கவனிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது அந்த லோக் அதாலத்.
காதலிக்கு அதிக நேரம்.. மனைவிக்கு ஓர வஞ்சனை
இந்த நிலையில், மனைவியை விட அதிக நேரம் காதலிக்கு ஒதுக்கி வந்தாராம் இந்த ரிடையர்ட் ஆசாமி. மேலும் காதலியை தனது வீட்டுக்கே கூட்டி வந்து விட்டார்.
லோக் அதாலத்துக்குப் போன மனைவி
இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி லோக் அதாலத்தில் வழக்குப் போட்டார். தன்னிடம் பாரபட்சமாகவும், காதலியிடம் அதிக பாசம் காட்டியும் கணவர் நடந்து கொள்வதாக அவர் முறையிட்டார்.
லோக் அதாலத்தின் அட்டகாச தீர்ப்பு
இந்த வழக்கை நீதிபதி கங்கா சரண் துபே விசாரித்தார். பின்னர் அவர் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தார். அவரது தீர்ப்பைப் பாருங்கள்...
ஒரே வீட்டில் வசிக்கலாம்
மனைவியும், காதலியும் ஒரே வீட்டில் வசிக்கலாம்.
ஆளுக்கு 15 நாள்
ஒரு மாதத்தில் மனைவிக்கு 15 நாட்களையும், காதலிக்கு 15 நாட்களையும் பிரதிவாதி ஒதுக்க வேண்டும்.
ஆளுக்கு ஒரு ரூம்
பிரதிவாதியின் வீட்டில் மொத்தம் 3 அறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மனைவிக்கு ஒரு அறை, காதலிக்கு ஒரு அறை என ஒதுக்கித் தங்கிக் கொள்ள வேண்டும். நடுவில் உள்ள அறை பிரதிவாதிக்கானது. அதில் அவர் தங்கிக் கொள்ளலாம்.
நடுரூமிலிருந்து ரெண்டு ரூமுக்கும் கதவு வைங்க..
இந்த நடு ரூமிலிருந்து மனைவியின் ரூமுக்கும், காதலியின் ரூமுக்கும் போய் வருவதற்கு வசதியாக கதவு வைத்துக் கொள்ள வேண்டும்.
மனைவிக்கும், காதலிக்கும் சம பங்கு
பிரதிவாதியின் அசையும், அசையா சொத்துக்களில் அவரது மனைவிக்கும், காதலிக்கும் சம பங்கு உண்டு... இதுதான் நீதிபதியின் தீர்ப்பாகும்.
பிப்ரவரி மாதம் எப்படி... ??!!!
இந்தத் தீர்ப்பில் 29 நாட்கள் வரும் பிப்ரவரி மாதத்தில் பிரதிவாதி எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும், 31 நாட்கள் வரும் மாதங்களில் அவர் எப்படி நாள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!