நிலவின் சுற்றுவட்ட பாதையை கடந்தது மங்கல்யான்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், நேற்று முன்தினம் அதிகாலை 12.49 மணியளவில் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து வெற்றிகரமாக விலக்கப்பட்டது. மங்கல்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நியூட்டன் திரவ இன்ஜின் சுமார் 20 நிமிடங்கள் இயக்கப்பட்டு, விண்கலத்தை புவி சுற்றுவட்டபாதையிலிருந்து விலக்கி செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்ல வைக்கும் ‘டிரான்ஸ் மார்ஸ் இன்ஜெக்ஷன்’ என்ற சிக்கலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர்.
செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்தை மங்கல்யான் நேற்று முன்தினம் வெற்றிகரமாக தொடங்கியது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையையும் கடந்து மங்கல்யான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் கி.மீ தூரம் மங்கல்யான் பயணிக்கிறது. இந்திய விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதையை கடந்து விண்வெளியின் வெகு தூரத்தில் பயணிப்பது இதுவே முதல் முறை. மங்கல்யான் பயணத்தை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!