Thursday, December 5, 2013

காற்றிலே கலந்து காணாமல் போகும்... சீனாவின் விசித்திர ‘இன்விசிபிள் மேன்’ போலின்

காற்றிலே கலந்து காணாமல் போகும்... சீனாவின் விசித்திர ‘இன்விசிபிள் மேன்’ போலின் 



இசையைக் கேட்டு காற்றில் கரைந்து போனேன்... காதலில் காணாமல் போனேன் என வசனம் பேசும் ஆசாமிகளைப் பற்றிக் கேள்விப் பட்ட்டிருப்பீர்கள். 

ஆனால், இந்த சீனாக்காரர் உண்மையிலேயே காற்றில் கலந்து கண்களுக்கு மறைந்து விடுகிறார். அதற்காக இவர் ஏதோ பெரிய மாயாஜால மந்திரவாதி எனத் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். 

விசிட்டிங் புரொபசராக பணியாற்றி வரும் இவரது வித்தைகளை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.... 

கலை வல்லுநர்.... 

சீனாவின் சாண்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் லு போலின். ஃபைன் ஆர்ட்ஸ் முதுகலை முடித்துள்ளார்.

மறைந்து போகும் கலை.... 

கலைத்துறையில் ஆர்வம் மிக்க போலின் கண்டறிந்தது தான் ‘ மறைந்து போகும் கலை'. கலையோடு ஐக்கியமாகி இவரின் கைவண்ணம் மிளிர்கிறது.

இன்விசிபிள் மேன்.... 

உலகத்தின் ஆறு முன்னணி பல்கலைக்கழகங்கள் இவரை தங்களது விசிட்டிங் புரொபசராக பணிக்கு வைத்துள்ளன. மக்கள் இவரை செல்லமாக ‘இன்விசிபிள் மேன்' என்றே அழைக்கிறார்கள்.

நகரத்துக்குள் மறைந்து போதல்.... '

நகரத்துக்குள் மறைந்து போதல்' என்கிற தலைப்பில் சீனா முழுவதும் சென்று மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் இடத்தில் அந்த இடத்தில் உள்ள சுவர், மேஜை, நாற்காலி போல தன்னையும் வரைந்து கொண்டு மறைந்து போய் விடுகிறார் போலின்.

வாழ்க்கை ஒரு புத்தகம்.... 

உதாரணத்திற்கு புத்தகக் கடையின் ரேக்கில் இருக்கும் புத்தகங்கள் போலவே உடலில் வரைந்து கொண்டு, பார்ப்பதற்கு புத்தகங்கள் போலவே நின்று கொள்கிறார்.

படிக்கட்டு மனிதர்... 

இதுபோலவே, காய்கறிக்கடை, படிக்கட்டுகள், சுவர்கள் எதுவாக இருந்தாலும் அது மாதிரியே தன் உடையில் வரைந்து ‘காணாமல்' போய் விடுகிறார் போலின்.

இன்னும் சில.... 

இதோ, உங்களுக்காக போலினின் மேலும் சில அற்புதப் படைப்புகள்.... இந்த சேர்களில் அவர் எங்கு உட்கார்ந்திருக்கிறார் என உங்களால் உடனடியாக அனுமானிக்க முடிகிறதா...

மரக்கட்டைகள் நடுவில்... 

மரக்கட்டைகளோடு மரக்கட்டையாக நின்று கொண்டிருக்கிறார் போலின். எப்படித்தான் மனுசர் அசராமல் லொகேஷன் மாத்துகிறாரோ....

இங்கே பாருங்கள்.... 

வண்டியோடு நின்று கொண்டிருக்கும் போலினை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமான வேலை தான். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்களேன்....

ஆவி எல்லாம் இல்லீங்க.... 

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது, இந்தக் காவலர் ஏதோ ஆவியுடன் இருப்பது போன்ற மாயை ஏற்படுகிறதல்லாவா... அது போலின் தான்.

திகில் அனுபவம்.... 

திகில் படங்களில் பார்த்திருப்போமே, ஆங்காங்கே ஒரு நிழலுருவம் யார் கண்ணுக்கும் புலப்படாமல் உலா வருவது மாதிரி, அந்த மாதிரி போலின் நிற்கிறார் பாருங்கள்....

கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும் 

இவரது பலப் புகைபடக்களைப் பார்க்கும் போது, என்னாமா யோசிச்சுருக்கான்யா மனுஷன்' என வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்தளவிற்கு கண்களை ஏமாற்றுகிறார் போலின்....

தேடித் தேடிப் பார்த்தேனே.... 

போலினின் சில படைப்புகளை பார்க்கும் போது, நன்றாக கண்ணைக் கசக்கிக் கொண்டு ‘உண்மையிலேயே அக்கு போலின் இருக்கிறாரா...' எனத் தேடித் தான் பார்க்க வேண்டி இருக்கிறது....

சூப்பர் போலின்.... 

போலினின் ஒவ்வொரு படைப்புகளுமே அவரது கடின உழைப்பை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது மறுக்க இயலாது....

கைண்ட் அண்டென்சன் ப்ளீஸ்.... 

மிஸ்டர் போலின், தயவு செஞ்சு எங்க ஊர்ப்பக்கம் வந்துடாதீங்க... உங்க உடம்புல ஏதாவது அரசியல் சின்னத்தை வரைந்து தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன் படுத்த ஆரம்பிச்சிடுவாங்க... ஹி...ஹி...ஹி...

















No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!