இமயமலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 8 லட்சம் பேருக்கு ஆபத்து
இமயமலைப் பகுதிகளில் ரிக்டர் ஸ்கேலில் 8 புள்ளி அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால், ஜம்மு,காஷ்மீர், அருணாச்சல பிரதேசம்உள்ளிட்ட மாநிலங்களில் 8 லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து என தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் எச்சரித்துள்ளது. இது குறித்து ஆணையத்தின் துணைத்தலைவர் எம். சசிதர்ரெட்டி கூறியிருப்பதாவது: வடகிழக்கு மலைப்பிரதேச பகுதிகளான இமாச்சல பிரதேசம் முதல் ஜம்மு,காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் வரை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அங்கு 8 புள்ளி ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் நடந்தால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரும். இமாச்சல பகுதிகளில் 53 ஆண்டுகள் இடைவெளியில் நிலநடுக்கம் நடந்துள்ளது. முதலில் 1897ம் ஆண்டு நடந் தது. பிறகு 1950ம் ஆண்டில் தான் ஏற்பட்டது. இதே போல அந்த மண்டலத்தில் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய இழப்புக்கள் ஏற்பட்டது.
1950ம் ஆண்டுக்கு பிறகு அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. அதே சமயம் தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால் 8 லட்சம் முதல் 9 லட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும். அதிக அளவில் பொருட்சேதமும் உண்டாகும். அதனால் அங்குள்ள வீடுகள் இடிந்தால் உயிர்சேதம் ஆகாமல் இருக்கும் வகையில் குடியிருப்புக்களை அமைக்க வேண்டும். நிலநடுக்கம் எங்கே, எப்போது ஏற்படும் என்று துல்லியமாக நாம் சொல்ல முடியாது. ஆனால் தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் இதிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்ற பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு சசிதர்ரெட்டி கூறியுள்ளார்.
Join with us on Facebook >>>
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!