Thursday, October 10, 2013

ஒரே ஒரு பர்சன்ட்தான்.. ஆனால் உலக வளங்களின் 46% இவர்கள் வசம்தானாம்!

ஒரே ஒரு பர்சன்ட்தான்.. ஆனால் உலக வளங்களின் 46% இவர்கள் வசம்தானாம்! 




உலகின் மிகப் பெரும் பணக்கார கோடீஸ்வரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டும் உலக வளங்களில் 46 சதவீதம் குவிந்து கிடப்பதாக கிரெடிட் சூஸ் ஆய்வுக் கழகம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடாக தொடர்ந்து அமெரிக்காவே முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் உலக கோடீஸ்வரர்களின் வருவாய் 68 சதவீத உயர்வையும் கண்டுள்ளதாம்.

241 டிரில்லியன் 

டாலர் வருவாய் உலக அளவிலான மொத்த வருமான எண்ணிக்கை இன்றைய தேதிக்கு 241 டிரில்லியன் டாலராகும்.

10 ஆண்டுகளில் 68 சதவீதம் உயர்வு 

கடந்த 10 ஆண்டுகளில் இது 68 சதவீதம் உயர்வாகும்.

மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்களிடம் 

உலக பொருளாதார வளத்தின் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் உள்ளது.

தனி நபரின் சராசரி வருவாய் 51,600 

டாலர் ஒரு தனி நபரின் சராசரி வருவாயும் உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது 51,600 டாலராக அது உயர்ந்துள்ளது.


சமச்சீர் இல்லை 

ஆனால் இந்த தனி நபர் வருவாய் உயர்வானது சமச்சீராக இல்லை. அதாவது பணக்காரர்களிடம் மட்டுமே இந்த வருவாய் உயர்வு காணப்படுகிறதாம்.

10 சதவீத கோடீஸ்வரர்களிடம் 86 சதவீத சொத்துக்கள் 

உலக அளவில் உள்ள பெரும் பணக்கார கோடீஸ்வரர்களில் 10 சதவீதம் பேரிடம் மட்டும் 86 சதவீத சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றனவாம்.

டாப் 1 சதவீதம் பேரிடம் 46 சதவீத உலக பொருளாதாரம் 

அதேபோல பெரும் பணக்காரர்களில் டாப் இடத்தில் உள்ள ஒரு சதவீதம் பேரிடம் உலக அளவிலான சொத்துக்களில் 46 சதவீதம் குவிந்திருக்கிறதாம்.

2018ல் 334 டிரில்லியன் டாலராகும் 

2018ம் ஆண்டு வாக்கில் உலகப் பெரும் பணக்காரர்களின் சொத்துக்களின் அளவு 334 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

பெரும் பணக்கார நாடுகள் 

1 லட்சம் டாலருக்கும் மேற்பட்ட வருமானத்தைக் கொண்ட தனி நபர்களை அதிகம் கொண்ட பணக்கார நாடுகள் பெரும்பாலும் வடக்கு அமெரிக்கா, மேற்கு ஐரோப்பியா, ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிகம் உள்ளனவாம்.

சுவிட்சர்லாந்து டாப்... 

இப்படி அதிக அளவிலான தனி நபர் சொத்துக்களை வைத்துள்ளவர்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவும், தொடர்ந்து நார்வே, லக்ஸம்பர்க் ஆகியவையும் உள்ளன.

கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்வு 

உலக அளவில் 2012ம் ஆண்டுக்குப் பின்னர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்கள்தான்.

ஜப்பானில் குறைந்தனர் 

அதேசமயம், ஜப்பானில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்தியா... 

பிரிக் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வளரும் பொருளாதார சக்திகளாக உருவெடுத்துள்ளன. இந்த நாடுகளில், சராசரியாக தலா 5830 பெரும் பணக்கார கோடீஸ்வரர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உலக அளவில் 5 சதவீத உயர்வு 

உலக அளவில் பிரிக் நாடுகளில் பணக்காரர்களின் எணணிக்கை 5 சதவீதம் உயர்ந்து, 19 சதவீதமாக உள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/business/46-per-cent-global-wealth-owned-by-richest-1-per-cent-credit-suisse-185143.html#slide366804

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!