Friday, May 10, 2013

தலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...உலகை உலுக்கிய படம்!


தலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...உலகை உலுக்கிய படம்!


வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கட்டட விபத்தை விட அந்த விபத்தின்போது உள்ளே சிக்கிபிணமாக மீட்கப்பட்ட ஒரு கணவன், மனைவியின் படம்தான் உலகையே உலுக்கி விட்டது.

கட்டடம் இடிந்து விழுந்தபோது மனைவியை விட்டுப் பிரியாமல், அவரைக் கட்டிப் பிடித்தபடி காணப்படுகிறார் அந்த கணவர். இந்தப் படம்தான் அனைவரையும் உலுக்கி விட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல், தப்பித்து்ப போக முயலாமல், கட்டிப் பிடித்தபடி பிணமாகியுள்ளனர்.


நாள்தோறும் விபத்து 

வங்கதேசத்தில் கட்டட விபத்துக்கள் குறிப்பாக கார்மென்ட் பேக்டரி கட்டடங்கள் இடிந்து பல நூறு பேர் சாவது இயல்பாகி வருகிறது. கிட்டத்தட்ட தினசரி ஒரு விபத்து என்று நடந்து வருகிறது.


பறிபோகும் நூற்றுக்கணக்கான உயிர்கள் 

இந்த விபத்துக்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய் வருகின்றனர். அவர்களில் பலர் பெண்கள், இளம் வயதினர்என்பதுதான் கொடுமையானதாக உள்ளது.


900 பேரை பழிவாங்கிய கோர விபத்து 

கடந்த மாதம் டாக்கா அருகே 8 மாடிகளைக் கொண்ட ராணா பிளாசா என்ற கார்மெண்ட் ஆலையின் கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர்.2000 பேர் வரை காயமடைந்துள்ளனர்.



கணவன் மனைவியின் பிணம் 

இந்த கட்டட இடிபாடுகள் இன்னும் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அந்த இடிபாடுகளில் ஒரு தம்பதியின் உடல்கள் சிக்கியுள்ளன. அதைப் பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்து போய் விட்டனர். கணவனும், மனைவியும் ஒருவர் பிரியாமல் இறுக்கி அணைத்தபடி காணப்பட்டனர்.


தப்பிக்க முயலாமல் பாசத்துடன் ஒரு மரணம் 

இருவரும் தப்பித்துப் போக முயலவில்லை. மாறாக மரணத்தின் கடைசி நொடி வரை இணை பிரியாமல் இருக்க முடிவு செய்து இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்துள்ளனர். இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் கலங்கிப் போய் விட்டனர்.



கண்ணீருக்குப் பதில் ரத்தம் 

அந்தத் தம்பதியினரின் உடல்களின் கீழ்ப் பகுதி கீழே புதைந்து விட்டன. மேல் பகுதி மட்டுமே தெரிகிறது. அந்த ஆணின் கண்களில் கண்ணீர் போல ரத்தம் ஓடி உறைந்து போயிருந்தது. இந்தப் புகைப்படத்தை தஸ்லிமா அக்தர் என்பவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.











No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!