ஜெனீவா வைர ஏலம்: ஈரானிய ராஜ வம்ச மஞ்சள் வைரம் ஏலத்துக்கு வருகிறது!
ஈரான் ராஜ வம்சத்தினர் பயன்படுத்திய, 100 ஆண்டுகளுக்கு முந்தைய, அரிய வகை மஞ்சள் நிற வைரம், சுவிட்சர்லாந்தில், ஏலத்திற்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின், ஜெனிவாவில், பிரபல ஏல நிறுவனத்தின் சார்பில், பழமை வாய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இம்மாதம் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் ஏலத்திற்கு, 100 ஆண்டுகளுக்கு முன், ஈரான் நாட்டைச் சேர்ந்த, கஜர் ராஜவம்சத்தினர் பயன்படுத்திய, அரிய வகை மஞ்சள் நிற வைரம் வந்துள்ளது.
இதை ஈரான் அரசர்கள், 1909 முதல் 1925 வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தியுள்ளனர். 74.53 காரட் அளவிலான, இந்த வைரத்தின் மதிப்பு, 1.8 மில்லியன் டாலர் என, ஏல நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!