இனி ரஷ்யாவில் புகைப்பிடிக்க முடியாது
ரஷ்யாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா இம்மாதம் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதை ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்த்து வாக்களித்தார். இந்த சட்ட மசோதாவில் ஜனாதிபதி விலாடிமிர் புதின் கைசாத்திட்டார். இந்த புதிய தடை சட்டம் வருகிற யூன் 1ம் திகதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும்.
அதன் பின்னர், தங்கும் விடுதிகள், பேருந்துகள், இரயில், விமானம், கப்பல் மற்றும் விமான நிலையம், இரயில் நிலையத்துக்கு 15 மீற்றர் உள்பட்ட இடத்தில் புகை பிடிக்கக்கூடாது.
ஹோட்டல்கள், காபிபார், உணவு விடுதிகள் ஆகியவற்றில் மேலும் ஓராண்டில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை கண் பார்வையில் தெரியும்படி வைக்கக்கூடாது என்றும் சிகரெட்டு கம்பெனிகள் பரிசு சீட்டு குலுக்கல், திருவிழா ஸ்பான்சர்ஸ் ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்பது இந்த தடை சட்டத்தில் அடங்கும்.
ரஷ்யாவில் 10 பேரில் 4 நபர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள். எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் இச்சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!