Thursday, February 28, 2013

பேச்சொலியைப் பாகுபடுத்திப் புரிந்துகொள்ளும் சிசுக்கள்'

பேச்சொலியைப் பாகுபடுத்திப் புரிந்துகொள்ளும் சிசுக்கள்'



தாயின் கருப்பையில் இருக்கும் சிசுக்கள், பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, வெளியில் இருந்து வரும் பேச்சொலிளிகளில் காணப்படும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்கின்றன என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

28 வார கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை ஒளி ஸ்கேன்கள் மூலம் சோதனை செய்ததில், பிக்கார்டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஒன்று, வெவ்வேறு வார்த்தைப் பதங்கள் மற்றும் ஆண் , பெண் குரல்களை, சிசுக்கள் பாகுபடுத்திப் பார்க்க முடிகிறது என்று தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.
கர்ப்பப்பையில் இருக்கும்போதே சிசுக்களால் ஒலிகளைக் கேட்க முடியும் என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒன்றுதான். சிசுக்களின் காதுகள் 23 வாரம் கர்ப்பத்தில் இருக்கும்போது வளரத்தொடங்குகின்றன.
மனித மூளைக்கு பேசப்படும் மொழியைப் புரிந்துகொள்ளத்தேவையான உள்ளார்ந்த அறிவுத்திறன் இருப்பதாக தாங்கள் நம்புவதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.

நன்றி BBC

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!