Thursday, February 28, 2013

பூச்சி உண்ணும் தாவரங்கள் எப்படி உணவைப் பெறுகின்றன?

பூச்சி உண்ணும் தாவரங்கள் எப்படி உணவைப் பெறுகின்றன?



இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள ஜவஹர்லால் நேரு தாவரவியல் ஆராய்ச்சிப் பூங்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் எப்படி அவற்றை ஈர்க்கின்றன என்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச தாவரவியல் சஞ்சிகையான பிளாண்ட் பயாலஜியில் அவர்கள் இது குறித்த கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

பூச்சிகளை உண்ணும் சில தாவரங்கள், நீல வண்ணத்தில் பிரகாசமான ஒளியை உமிழும் மின் விளக்குகள் போலச் செயல்படுகின்றன என்று தமது ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

பல வகையான பூச்சி உண்ணும் தாவரங்களில் உள்ள சில பகுதிகள் இவ்வகையில் ஒளியை உமிழும் மையங்களாக இருக்கின்றன எனவும், அந்த ஒளி பூச்சி புழுக்களை கவர்ந்திழுக்கின்றன என்றும் அவர்கள் தமது அக்கட்டுரையில் எழுதியுள்ளனர்.

இவ்வகையான பூச்சி உண்ணும் தாவரங்கள், தமது உணவை சுவை, மணம் மற்றும் வண்ணத்தின் மூலமே கவர்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறிவந்தனர்.

நீல வண்ணத்தை உமிழும் தாவரங்கள் அதன் காரணமாகவே பூச்சிகளை தம்மை நோக்கி இழுக்கின்றன என்பது இதுவரை அறியப்படாத ஒன்று என, அந்த ஆய்வுக் குழுவின் ஒரு உறுப்பினரான டாக்டர் சாபுலால் பேபி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மிகவும் மங்கலான சூழலிலும் இந்தத் தாவரங்கள் வெளியிடும் நீல ஒளி, புழு பூச்சிகளை சுண்டி இழுக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நன்றி BBC

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!