குழந்தைக்கு பெயர் சூட்டிய பெற்றோர் ‘மை நேம் இஸ் கூகுள்’
குழந்தைகளுக்கு ‘கூகுள்’ என்று பெயர் சூட்டுவது பேஷன் ஆகி விட்டது. டெல்லியை சேர்ந்தவர் வக்கீல் முனீஸ் சந்தர் ஜோஷி. சமீபத்தில் அவருக்கு பிறந்த அழகான ஆண் குழந்தைக்கு, கூகுள் என்று பெயரிட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் புதுமையானது அல்ல. ஏனெனில், அதே காரணத்தை லூதியானாவை சேர்ந்த பெண் உமா தவான் ஏற்கனவே கூறி இருக்கிறார்.‘‘எந்த குழந்தையாக இருந்தாலும் அதற்கு பெயர் சூட்டும்போது, அதன் தோற்றத்திற்கு ஏற்றதாக அது இருக்க வேண்டும். அதன்படி எனது 3 வயது மகனுக்கு கூகுள் என்று பெயர் சூட்டியுள்ளேன். வீட்டில் ஏதாவது ஒரு பொருளை எங்காவது வைத்துவிட்டு, இடம் தெரியாமல் தேடுவது எல்லாருக்கும் வழக்கம். அப்படி நான் தேடும்போதெல்லாம் 5 நிமிடங்களில் அதை கண்டுபிடித்து கொடுத்து விடுவான். அந்த ஒரு காரணத்திற்காகவே அவனுக்கு கூகுள் என்ற பெயரை சூட்டி விட்டேன். இப்போது அவன் எங்கள் வீட்டில் மட்டுமல்ல; பள்ளியிலும் பாப்புலராகி விட்டான்’’ என்று சிரிப்பும் பூரிப்புமாய் அந்த பெண் சொன்னதைதான் டெல்லி வக்கீலும் கூறியிருக்கிறார்.
சர்ச் இன்ஜின் என்று சொல்லப்படுகிற தேடுதலுக்கான வலைத்தளம் கூகுள், நவீன உலகின் ஆதார மையம். கூகோள் (ரீஷீஷீரீஷீறீ) என்ற வார்த்தையில் இருந்து உருவான இந்த சொல்லுக்கு கணித சாஸ்திரப்படி, 1,ஐ 100 பூஜ்ஜியங்கள் தொடர்வதாக அர்த்தம். குக்கிராமங்களில் கூட கூகுள் பிரபலமாகி விட்டதால், அதையே தனது குழந்தைகளுக்கு பெயராக சூட்டும் பழக்கமும் வந்து விட்டது. முதன் முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது 2005ல். சுவீடன் நாட்டு தம்பதியினர் தான் தங்களது குழந்தைக்கு ‘ஆலிவர் கூகுள் கெய்’ என்று பெயர் சூட்டி, இந்த மந்திரத்தை பிற நாட்டினருக்கு கற்று கொடுத்தனர். இந்தியா வந்து சேர அதற்கு ஏழாண்டு பிடித்திருக்கிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!