பாலை திருடும் பூனையின் விசித்திர திறன்
பாலை திருடுவது பூனையின் சாகசங்களுள் ஒன்று. இந்த சாகசத்தை நிகழ்த்த அதன் உடலமைப்பு எவ்வாறு அதற்கு பயன்படுகிறது என்ற கேள்வி எழுந்தது ரோமன் ஸ்டாக்கர் என்ற பொறியாளருக்கு. இந்த சந்தேகத்தின் அடிப்பிடையில் அவர் ஒரு ஆராய்ச்சி நடத்தினார். அதில், நாய்கள் தங்கள் நாக்கினை ஒரு குழி கரண்டி போல் லாவகமாக மடித்து திரவ உணவுகளை அள்ளிக்கொள்ளும் தன்மை படைத்தவை. ஆனால், பூனைகளுக்கு இது சாத்தியமில்லை. அவை நுனி நாக்கினை பயன்படுத்தியே பால் போன்ற திரவங்களை உறிஞ்சுகின்றன.
பூனை தனது நாக்கினை பயன்படுத்தி ஈர்ப்பு விசையை தாண்டிய ஒரு விசையுடன் திரவங்களை உறிஞ்சுகிறது. ஒரு பாத்திரத்தில் சாயம் கலந்த தண்ணீரை நிரப்பி தன் வீட்டு பூனையை குடிக்க வைத்து அந்த காட்சியை அதிவேக வீடியோ கேமரா மூலம் படமாக்கி மேற்சொன்ன உண்மையை ஸ்டாக்கர் கண்டறிந்தார். தண்ணீர் நிறமற்றது என்பதனால் அதிவேக காமிராவில் அது தெரியாமல் போகும் என்பதனால் தண்ணீரில் சாயம் கலந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த கண்டுபிடிப்பு ரோபோ தயாரிப்பில் பயன்படுத்த ஏற்றது என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!