இரவு நீண்ட நேரம் வேலைப் பார்க்கும் ஆண்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைகள்!!!
நமது வாழ்வில் பணம் முக்கியம் தான். ஆனால், நமக்கு கிடைத்த பணத்தை கொண்டு நிம்மதியாக வாழுவோர் வெகு சிலர்தான். பலபேர் அதனை மேலும் அதிகரிக்க தனது பணிநேரத்தை விட கூடுதல் நேரம் உழைக்க முற்படுகின்றனர். இவ்வாறு இரவு வெகுநேரம் உழைப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணம் கிடைத்தாலும் அதனால் ஏற்படும் உடல்நலக்குறைகள் தான் அதிகம். இவ்வாறு உடல் வருத்தி உழைப்பதை குறைத்து கிடைத்த நேரத்தில் வேலைப்பார்த்து ஆரோக்கியமான உடல்நலத்தை பெறவேண்டும்.
தற்போதைய வாழ்க்கை முறையை செயல்படுத்தி நல்வாழ்கை வாழ இன்று பலர் ஒரு மணிநேரம் மிகையாக வேலைப் பார்க்க முனைகின்றனர். வேகமாக வளர்வதற்காகவும், அயராது எதாவது சாதிப்பதற்காகவும் இது பலருக்கு தொல்லையாக மாறி வருகின்றது. அதனால் உடல்ரீதியையும், மனரீதியையும் தாண்டி உழைக்க முற்படுகின்றனர். வழக்கமான அடிப்படையில் இவ்வாறு நீண்டநேரம் வேலைப் பார்ப்பதால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கையற்ற முறையான காப்ஃபைன் உட்கொண்டு வேலைப் பார்ப்பது போன்றவை அவர்களை மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக வேலைப் பார்க்க தூண்டுகின்றது.
வழக்கமான அடிப்படையில் நீண்ட நேரம் வேலைப் பார்ப்பதால், உங்களுடைய தூக்கம் குறைந்து இதய நோய்கள் மற்றும் ட்ரீகர் ஸ்ட்ரோக் போன்ற உடல்நலக்குறைகளை ஏற்படுத்தும். நீண்ட நேரம் வேலைப்பார்க்கும் ஆண்களுக்கு குறுகியகால மற்றும் நீண்டகால உடல்நலகுறைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறுகிய கால குறைகளான வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும். நீண்டகால குறைகளான இதய நோய், சர்க்கரைநோய், மெட்டபாலிக் சிண்ட்ரோம், உடல் எடை அதிகரிப்பு, கருத்தரிப்பதில் பிரச்சனைகள், பிரசவ கால பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
அதனால், ஆண்கள் தங்களது வாழ்க்கை முறையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். வாழ்க்கை சிறிதாக இருந்தாலும், அதனை வளமாகவும் சிறப்பாகவும் வாழ்வது மிகவும் முக்கியமானதாகும். பொறாமை மற்றும் தேவைக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் போன்றவை தான் நம்மை மிகையான நேரம் வேப் லைபார்க்கக் காரணமாக இருப்பவைகளாகும். இதன் விளைவாக நமக்கு கிடைப்பது உடல்நலக் குறைகள் மட்டும் தான்.
இரவு நீண்ட நேரம் வேலைப் பார்ப்பதால் ஆண்கள் சந்திக்கும் உடல்நலகுறைகள் என்ன என்று பார்க்கலாம்.
ஊக்குவிகளுக்கு அடிமையாகுதல்
இரவு நீண்ட நேரம் வேலைப் பார்க்க நீங்கள் நாடுவது ஊக்குவிகளும் எனெர்ஜி உயர்த்திகளுமான காப்ஃபைன் மற்றும் சிகரெட் போன்றவற்றைதான். இது நம்மை அதற்கு அடிமையாக்கி, உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கும். சிறிது காலத்திற்கு பின்னர் காப்ஃபைன் மற்றும் நிக்கோடின் அடிமைகள், நமக்கு தூக்கக் குறைபாடுகள் மற்றும் கலக்க மனநிலை போன்றவற்றில் கொண்டு போய் விட்டுவிடும்.
இரையக குடல் ஒழுங்கின்மை
இரவு நீண்ட நேரம் வேலைப் பார்ப்பது மற்றும் ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது போன்றவை இரையக குடல் ஒழுங்கின்மை குறைகளான வயற்றுபோக்கு, வாந்தி, பேதி, மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருந்தாலும் இரையக குடல் ஒழுங்கின்மை குறைகளை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை
இன்று பல ஆண்கள் இரவு வெகுநேரம் உழைப்பதால், நேரத்திக்கு தூங்குவது மற்றும் தூக்கத்தின் பண்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை புறக்கணிகின்றனர். தூக்கத்தை குறைப்பதால் ஏற்படும் தூக்கமின்மை நோய் வந்து தூங்க முடியாமல் அவதிபடுவார்கள்.
இதய குழாய் நோய்
தூங்காமல் வேலைப் பார்ப்பதற்கும் இதய நோய் வருவதற்கும் தொடர்பு இருப்பதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது இரவு நேரங்களில் வேலைபார்க்கும் ஆண்களுக்கு அதிகம் வரும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
சர்க்கரை நோய்
இரவு நேரம் வேலைப் பார்ப்பவர்களுக்கு வரும் அடுத்த உடல்நலக்குறை சர்க்கரை நோய் ஆகும். ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது, இரவு நேரங்களில் வேலை பார்க்கும் போது ஒழுங்கற்ற இடைவேளைகளில் சாப்பிடுவது போன்றவை ஆண்களிடையே அதிக இரத்தஅழுத்தம், அதிக சர்க்கரை, உடல்எடை அதிகரிப்பு மற்றும் சுகாதாரமற்ற இரத்தகொழுப்பு போன்றவற்றை உண்டாக்கும்.
உடல் எடை அதிகரிப்பு
இரவு அதிக நேரம் வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கக் கூடும். ஒழுங்கான சாப்பாடு சாப்பிடாமல் இருப்பது மற்றும் உடற்பயிற்சி செய்யாமை போன்றவை இதற்கு வழிவகுக்கும். இரவு நேரங்களில் வேலைப்பார்ப்பதால் நமது பசியை நேர்படுத்தும் ஹார்மோனான லெப்டின் அளவு குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மனச்சோர்வு மற்றும் மனநிலை ஒழுங்கின்மை
இரவு நேரங்களில் வேலைப் பார்ப்பவர்களிடையே மனச்சோர்வு மற்றும் மனநல ஒழுங்கின்மையான மனக்கவலை போன்றவற்றிற்கான அறிகுறிகள் தென்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இரவு நேரங்களில் வேலைப் பார்ப்பவர்களிடையே நமது மனநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும் மூளையில் உள்ள செரோடொனின் அளவு குறைவாக இருக்கும்.
கருவுறுதலில் குறைகள்
இரவு வெகுநேரம் வேலைப் பார்ப்பதால், கருவுறுதலில் பிரச்சனை, ஆண்மை குறைபாடு, விந்தணு குறைவு போன்றவை ஏற்படும். இரவு வெகுநேரம் வேலைப் பார்க்க காப்ஃபைன் மற்றும் நிக்கோடின் போன்றவற்றிக்கு அடிமையாகி பாலினச்செயல்பாடு குறைந்து கருத்தரிக்கும் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!