Tuesday, November 19, 2013

சிறார் ஆபாசப் படங்கள்.. முடிவு கட்டப் போகும் கூகுள், பிங் சர்ச் என்ஜின்!

சிறார் ஆபாசப் படங்கள்.. முடிவு கட்டப் போகும் கூகுள், பிங் சர்ச் என்ஜின்!




சிறார் ஆபாசப் படங்களை தேடுவோரின் கண்களுக்கு.. இனிமேல் ரிசல்ட் கிடைக்காது. காரணம், இப்படிப்பட்ட ஆபாச தேடல்களுக்கு கூகுளும், மைக்ரோசாப்ட்டின் பிங் சர்ச் என்ஜினும் முடிவு கட்டப் போகின்றன.

அதாவது இத்தைகய தேடல்களை அவை பிளாக் செய்யவுள்ளன. எனவே இனிமேல் யாராவது child porn என்று டைப் செய்து சர்ச் செய்தால் அவர்களுக்கு ரிசல்ட் கிடைக்காது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார் பாலியல் விஷயங்கள் தொடர்பான தேடல்களுக்கு தடை விதித்துள்ளது கூகுள் சர்ச்சும், மைக்ரோசாப்ட் நிறுவனமும்.

இவை இனி சட்டவிரோதம்

இதுபோன்ற சிறார் பாலியல் விஷயங்களைத் தேடுவது இனி சட்டவிரோதமாக கருதப்படும். மேலும் சிறார்களின் பாலியல் படங்களைத் தேடுவது சட்டவிரோதம் என்ற எச்சரிக்கை வாசகமும் இனி இடம் பெறுமாம்.

சிறார்களுக்கு எதிரான பாலியல் வக்கிரங்களை ஒழிக்க

சிறார்களுக்கு எதிரான பாலியல் வக்கிரப் போக்கை ஒழிக்கும் வகையில் மைக்ரோசாப்ட்டும், கூகுளும் கைகோர்த்துள்ளன. அதன் விளைவே இந்தத் தடையாகும்.

எந்த வகையிலும் இனி தேட முடியாது

மேலும் சிறார்களின் ஆபாசப் படங்களை எந்த வகையிலும் தேட முடியாதபடி கிடுக்கிப் பிடி போடவுள்ளனராம்.

150 மொழிகளில்

இதுகுறித்து கூகுள் தலைவர் எரிக் ஸ்மித் லண்டனில் கூறுகையில், விரைவில் இது நடைமுறைக்கு வரவுள்ளது. உலகம் முழுவதும் 150 மொழிகளில் எச்சரிக்கை வாசகத்துடன் கூடியதாக இனிமேல் எச்சரிக்கை வாசகம் இடம் பெறும்.

இந்திய மொழிகளிலும்

இந்தியாவின் முதன்மை மொழிகளான தமிழ், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

கேமரூன் மாநாட்டைத் தொடர்ந்து

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், லண்டனில் இணையதள பாதுகாப்பு மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ள நிலையி்ல் இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறார்களைக் காக்க கேமரூன் அழைப்பு

இணையதள பாதுகாப்பு மாநாட்டை தொடங்கி வைத்து கேமரூன் பேசுகையில், இணையதளங்கள் மூலம் சிறார்களை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தும் செயலுக்கு நாம் முடிவு கட்டியாக வேண்டும். சிறார்களை பாலியல் வக்கிரங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு சர்ச் என்ஜின்களில் பெருமளவிலான மாற்றம் வர வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.

கூகுள் - பிங்குக்கு அறிவுரை

மேலும் கடந்த ஜூலை மாதம் டேவிட் கேமரூன் கூறுகையில், உலக அளவில் முன்னணியில் உள்ள சர்ச் என்ஜின்கள் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்டின் பிங்தான். இவை இரண்டும் 95 சதவீத தேடுதல்களை நடத்துகின்றன. எனவே இவர்கள் நினைத்தால் சட்டவிரோதமான முறையில் சிறார்களின் பாலியல் படங்கள் மக்களுக்குக் கிடைப்பதைத் தடுக்க முடியும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இங்கிலாந்தில்...

இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் சிறார்கள் பாலியல் வக்கிரப் படங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பெருமளவில் இந்த இணையதள பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்படுகின்றனராம். படங்கள், வீடியோ கிளிப்புகள் வெகு சுலபமாக கிடைப்பதால் இவர்கள் இலகுவாக கெட்டுப் போகின்றனராம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!