எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது
எரிபொருள் தீர்ந்து போனதால், ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் செயற்கைக் கோள்களில் ஒன்று இன்று பூமியில் மோதவுள்ளது.
பூமியில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் இது வந்து விழும் என்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அனேகமாக இது கடல் அல்லது துருவப் பிரதேசத்தில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக் கோளின் பெயர் ஜோஸ். இது கீழே வரும்போது முற்றிலும் உருக்குலைந்த நிலையில்தான் வருமாம். கீழே வந்து விழும்போது அதன் துண்டுகள்தான் நமக்குக் கிடைக்கும்.
அதுவும் 90 கிலோ அளவுக்குத்தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!