பிலிப்பைன்ஸை தாக்கியது 'ஹயான் சூறாவளி' : மணிக்கு 275 கி.மீட்டர் வேகத்தில் வீசும் அசுர காற்று
பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க துவங்கியிருப்பதால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை ஹயான் என்னும் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குமென்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதனையடுத்து இன்று மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க துவங்கியது. மணிக்கு 275 கி.மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த சூறாவளி காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றன. பலத்த சூறாவளி காரணமாக கடல் அலைகளும் 4 முதல் 5 மீட்டர் உயரத்திற்கு சீற்றத்துடன் காணப்படுகின்றன. பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
சூறாவளியால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ள நகரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலோரங்கள் மற்றும் ஆற்றுப்படுகையில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அதிபர் பெனிக்நோ அக்னோ ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனால் 20க்கும் மேற்பட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு முகாம்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!