கூகுளில் எச்சிரிக்கை தேவை !
இணையத்தில் சிறந்து விளங்கும் கூகுள் அது தன் வாடிக்கையாளர்களை கவர பல யுத்திகளை தினமும் கையாண்டு வருகிறது இதன் முலம் அதன் யூஸர்ஸ் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.மேலும் கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஒரு மல்லியனுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டு தற்பேது செயல்பட்டு வருகிறது.
இது பெரும்பாலும் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு பொருந்தும் வண்ணமே இதன் அனைத்து அப்ளிகேஷன்களுமே இருக்கும் நண்பரே, இதற்கு காரணம் ஆண்ட்ராய்டு உலக மொபைல் சந்தையை ஆக்கிரமித்து இருப்பது தான் காரணம்.இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது சென்ற ஏழு மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 1,200 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!