Wednesday, November 6, 2013

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள்

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள் 


களக்காடு அருகே முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரியவகை வண்ணத்துப்பூச்சிகள், அந்து பூச்சிகள் உள்ளிட்டவை இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர பரப்பளவில் களக்காடு-முண்டதுறை புலிகள் காப்பகம் உள்ளது. 

இங்கு புலி, கரடி, அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இது தவிர பல வகை பூச்சிகளும் உள்ளன. இந்நிலையில் டாக்டர் கீதா ஐயர் என்பவர் இது தொடர்பாக ஆராய்ச்சில் ஈடுபட்டு வந்தார். இதில் களக்காடு முண்டந்துறை பகுதியில் பல்வேறு அரிய வகை வண்ணத்துபூச்சிகள் மற்றும் அந்து பூச்சிகள் இருப்பதும் தெரியவந்தது. 

ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணத்து பூச்சிகள், அந்து பூச்சிகளின் வண்ண படங்கள் அடங்கிய ஒரு தகவல் தொகுப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல் தொகுப்பை தலைமை வன காவலர் ராகேஷ் குமார் டோக்ரா வெளியிட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், களக்காடு புலிகள் காப்பகத்தில் தாவரங்கள் மற்றும் வன வளத்தை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் பல தரப்பட்ட சிற்றினங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. 

ஆனால் இவற்றில் பலவற்றை பற்றி பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே மாணவர்கள், பொதுமக்கள், வன ஆய்வாளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த தகவல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளன. அந்து பூச்சிகள் பொதுவாக இரவில் மட்டுமே நடமாடும். அவற்றை அப்போதுதான் பார்க்க முடியும். அவைகளின் பெருக்கம் குறைந்து வருவதால் இவற்றை பாதுகாப்பது பொதுமக்களின் கடைமை என்றனர்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!