Wednesday, August 28, 2013

அமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ முதலிடம்: காம்ஸ்கோர்

அமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ முதலிடம்: காம்ஸ்கோர்



காம்ஸ்கோர் நிறுவன பகுப்பாய்வில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, யாஹூ இணையதளம் 2013 ஜூலை மாதத்தில் அமெரிக்கா இணையத்தில் பல தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. யாஹூ கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக கூகிள் செயல்பாட்டை பின்னுக்கு தள்ளியுள்ளது. 

காம்ஸ்கோர் மீடியா மெட்ரீக்ஸ் தரவரிசையில் 50க்கும் மேற்பட்ட அமெரிக்கா பண்பு அறிக்கையில் யாஹூ தளங்கள் 2013 ஜூலை மாதத்தில் 225,359,000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து சுகுள் தளங்கள் 192.251.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது, மைக்ரோசாப்ட் தளங்கள் 179.595.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது, ஃபேஸ்புக் தளங்கள் 142.266.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது மற்றும் ஏஓஎல் தளங்கள் 117.395.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது. 

இணையத்தில் பார்வையாளர்களுக்கு சென்றடையும் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன, காம்ஸ்கோர் இன் விளம்பர ஃபோகஸ் தரவரிசையின்படி முதலாவது இடத்தில் உள்ளது. காம்ஸ்கோர் இன் விளம்பர ஃபோகஸ் தரவரிசையில் யாஹூ 87.2 சதவீதம் அடைந்துள்ளது. அதாவது, ஜூலை மாதத்தில் மொத்த மாதிரி அளவிலான 225 மில்லியன் இணைய பயனர்களில் 87.2 சதவீதம் யாஹூ தளங்களில் பதிவு செய்யப்பட்டது. கூகுள் 80.6 சதவிகிதம் அடைந்து நான்காவது இடத்தில் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக கூகுளை இரண்டாவது நிலைக்கு தள்ளி யாஹூ முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம், யாஹூ இரண்டாவது காலாண்டின் நிகரலாபம் கடந்த வருடத்தில் இருந்ததைவிட கடுமையாக உயர்ந்துள்ளது, ஆனால் வருவாய் பின் தங்கியுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. நிகர லாபம் எதிர்பார்த்ததை விட $331 மில்லியன் முன்னேற்றம் அடைந்துள்ளது, கடந்த வருடத்தில் இருந்ததைவிட நடப்பு ஆண்டில் 46% உயர்ந்துள்ளது, ஆனால் கூட்டாளர்களுக்கு செலுத்தும் முறைகளை தவிர்த்தால் வருமானம் 1% குறைந்து $1.07 பில்லியனாக உள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!