Wednesday, August 28, 2013

"உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.

"உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.




வெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.

உடல் சூடு, மலச்சிக்கலை போக்க
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

வயிற்றுக்கோளாறு நீங்க
ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அழகுக்கு பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.
அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.

பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும்.
மேலும் பல பயன்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.

நமது அன்றாட உணவின் அங்கமாகவும், நறுமணப் பொருள் என்ற வகையில் உணவு வகைகளில் ஊட்டச்சக்தியையும், சுவையையும் அதிகரிக்கின்றது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது.
குளிர்ச்சித் தன்மையளிப்பதால் பெரியம்மை நோய் கண்டவர்க்கு பானமாகவும், உடலுரமுண்டாக்குவதற்கும், ஆண்மை பெருக்குவதற்கும் பயன்படுகிறது.

கூந்தல் தைலத்திலும் வாசனைப் பொருள்களிலும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ரிக்கெட்ஸ், இரத்த சோகை, நீரிழிவு ஆகிய துன்பந்தரும் நோய்களை குணப்படுத்தும் குணமும், திறனும் இதற்குண்டு. இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மிதமான பேதி மருந்து, புறவீக்கம், தீக்காயங்கள் இவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன.
வறுத்த வெந்தயப் பொடி மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும்.
பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.


Join with us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!