Tuesday, June 25, 2013

உன்ன பெத்ததுக்கு, ஒரு கோழிக்குஞ்சப் பெத்துருக்கலாம்...

உன்ன பெத்ததுக்கு, ஒரு கோழிக்குஞ்சப் பெத்துருக்கலாம்... 



பொதுவாக கோழிகளுக்கு சாதாரணப் பறவைகளைப் போன்ற மூளை இல்லையாம். இள் வயது கோழிகள் சிறு குழந்தைகளை விட சிறப்பாக சிந்திப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. பொதுவாக சிருகுழந்தைகள் தடுமாறும் விஷயங்களான எண்ணியல் மற்றும் சுயக் கட்டுப்பாட்டில் குழந்தைகளை விட புத்திசாலித்தனமாக கோழிகள் செயல் படுவதாக தெரிய வந்துள்ளதாம்.

முட்டையிலிருந்து வெளிவந்த சிரு கோழிக்கு இருக்கும் அறிவை, குழந்தைகள் அனுபவப் பூர்வமாகப் பெற ஆண்டுகள் பல பிடிப்பதாக ஆய்வு சொல்கிறது.

பாத்து... பொறுமையா சாப்பிடுப்பா 

இந்த ஆய்வில் அதிக அளவிலான உணவை கொண்டு வந்து கோழிகளின் முன்பு வைத்த போது, அவை சிறிது நேரம் யோசித்து பின் பொறுமையாக உண்டனவாம். இத்தகைய சுய கட்டுப்பாடு குழந்தைகளுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட நான்கு வயதாகிறதாம் குழந்தைகளுக்கு.

கணக்கு மாஸ்டர்ஸாம் கோழிகள்... 

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், கோழிகளுக்கு முட்டையிலிருந்து வெளி வரும் போதே ஐந்து வரையிலான எண்கள் தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறதாம், ஆனால், குழந்தைகளுக்கு எண்களை நாம் தான் கற்பிக்க வேண்டியுள்ளது.


கோழி, ஜாக்கிரதையான ஆளுங்க... 

பொதுவாக கோழிகளுக்கு உள்ளுணர்வு திறன் கொஞ்சம் அதிகமாம். உள்ளுணர்வை வைத்தே சந்தேகத்திற்குரிய அல்லது சீரற்ற பொருட்களின் ஆபத்தை உணர்ந்து கொள்கின்றனவாம் கோழிகள். ஆனால், குழந்தைகள் இந்த நிலைக்கு வர குறைந்தது ஓராண்டாவது ஆகுமாம்.

கோழி தான் புத்திசாலிப் பறவை... 

அதனால் தான் சிலர் கோழியை புத்திசாலிப் பறவை எனக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார் இது குறித்து 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் புரொபஷர் கிறிஸ்டின் நிகோல்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!