Tuesday, June 25, 2013

கொட்டுகிறது அருவி; ஆறாக ஓடுகிறது சரக்கு குற்றாலத்தில் ரூ.2.50 கோடிக்கு மது விற்பனை

கொட்டுகிறது அருவி; ஆறாக ஓடுகிறது சரக்கு குற்றாலத்தில் ரூ.2.50 கோடிக்கு மது விற்பனை


குற்றாலத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே களை கட்டியது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அருவிகளில் குளிக்கும் பயணிகளுக்காக ஆயில் மசாஜ¢, படகு சவாரி என பொழுது போக்குக்கும் குறைவில்லை என்றாலும், இளைஞர்கள் பலர் குளிப்பதற்கு முன்பே ஓடுவது டாஸ்மாக் கடையை நோக்கித் தான்.

மனதை நெருடும் சாரல், இதமான குளிருக்கு நடுவே சரக்கு விற்பனை குற்றாலத்தில் சக்கை போடு போடுகிறது. சீசனுக்கு முன்பு குற்றாலத்தில் மெயின் அருவிக்கு அருகே மட்டும் 2 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந¢த கடைகளில் ஒரு நாள் விற்பனை ரூ.50 ஆயிரத்தை தாண்டாது.  தற்போது சீசனை முன்னிட்டு மேலும் 2 கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. குற்றாலம், தென்காசி சாலையில் கூடுதலாக ஒரு கடை திறக்கப்பட்டது. மற்றொரு கடை திறக்க இடம் கிடைக்காததால் அந்த கடையை பழைய குற்றாலத்துக்கு மாற்றியது.

மெயின் அருவி பகுதிய¤ல் அமைந்துள்ள மூன்று கடைகளிலும் நாள் ஒன்றுக்கு விற்பனை ரூ.10 லட்சத்தை தாண்டுகிறது. ஒரு கடையில் தற்போது நாள் ஒன்றுக்கு வருவாய் ஸீ3 லட்சத்தை தாண்டுகிறது. கடந்த 25 நாட்களில் மட்டும் விற்பனை ரூ.2.50 கோடியை தாண்டியுள்ளது. அருவியை போன்று டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுவதால் குற்றாலத்தில் மதுபான கடைகள் நிரம்பி வழிகின்றன.

நெல்லை மாவட்டத்தில் பிற மதுபான கடைகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சரக்குகள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், குற்றாலத்தில் உள்ள டாஸ்மாக¢ கடைகளுக்கு தினமும் சரக்குகள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!