Tuesday, June 18, 2013

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: பணப்பரிமாற்றம் திருடர்கள் !

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: பணப்பரிமாற்றம் திருடர்கள் !




லண்டனில் உள்ள பல வங்கள் தற்போது காண்டக்-லஸ் என்னும் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை கொடுத்து வருகிறது. உங்கள் வங்கி மற்றும் கடன் அட்டையில் பின் வரும் குறியீடு இருப்பின்அது காண்டக்-லஸ் கார்டு என்று அர்த்தம். 20.00 பவுண்டுகளுக்குள், பொருட்களை நாம் வாங்கினால், எமது இரகசியக் குறியீடு நம்பரைப் பாவிக்காமல் அந்த கார்டை மெஷினில் தொட்டாலே போதும். கடைக்காரருடைய மெஷின் எமது கார்டில் பணத்தை எடுத்துவிடும். இந்த முறை இலகுவானது என்று அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அதுவே தற்போது தலையிடியாக மாறியுள்ளது. குறிப்பாக நீங்கள் காண்டக்-லெஸ் என்னும் அந்த கிரெடிட் கார்டைக் கொண்டுசெல்லும்போது, அதனை அறியக்கூடிய இலத்திரனியல் உபகரணத்தை உங்கள் பாக்கெட்டில் அல்லது உங்கள் உடலில் டச் பண்ணிலால் போதும். உங்கள் கிரெடிட் காட் இரகசியங்கள் குறிப்பிட்ட நபருக்குச் சென்றுவிடும்.

இதனால் பெரும் ஆபத்து தோன்றியுள்ளது. வழமையாக பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் வங்கி அட்டைகளை சிலர் களவாடுவதும் பின்னர் இன்ரர் நெட் ஊடாக நாம் காசு செலுத்தும்போது எமது வங்கி அட்டைகளை சிலர் களவாடுவதும் வழக்கம். ஆனால் இந்த புதிய முறையானது யாருக்கும் தெரியாமல் நடக்கும் ஒரு விடையமாக உள்ளது. அத்தோடு உங்கள் கடன் அல்லது வங்கி அட்டைகளை நீங்கள் பாவிக்காமலே உங்கள் அட்டைகளின் விபரங்களை அவர்களால் திருட முடிகிறது. எனவே காண்டக்-லஸ் எனப்படும் குறிப்பிட்ட வங்கி அட்டைகளை கொண்டுசெல்லும்போதும் நீங்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் யாராவது உங்கள் மேல் முட்டப் பார்த்தால், இல்லை என்றால் உங்கள் பாக்கெட் இருக்கும் பகுதியை முட்ட நினைத்தால் கவனமாக இருப்பது நல்லது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!