வருமானம் உள்பட எல்லாவற்றிலும் ஆஸ்திரேலிய மக்கள்தான் டாப்
''பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி''க்கான ஓஇசிடி என்ற அமைப்பு, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழும் மக்களிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி அடைந்த 30 நாடுகளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது, மக்களின் வாழ்க்கை தரம் வசிப்பிடம், வருமானம், வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், ஆரோக்கியம், பாதுகாப்பு, வாழ்க்கை சமன்பாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம் பெற்றன.
மக்களின் பதில்கள் அலசி ஆராயப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது. இதில் வளர்ச்சி அடைந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 84 சதவீத ஆஸ்திரேலியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து ஓஇசிடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் 15 வயது முதல் 64 வயது வரை உள்ள 73 சதவீதம் பேர் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தின் சராசரி வருமானம் ஆண்டுக்கு 28,884 அமெரிக்க டாலராக உள்ளது.
ஆரோக்கியத்தின் அடிப்படையில் மக்களின் சராசரி ஆயுள் 82 வயதாக உள்ளது. மொத்தத்தில் அனைத்து விதங்களிலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது ஆஸ்திரேலியர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த பட்டியலில் சுவீடன், கனடா, நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், நெதர்லாந்து, ஐஸ்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடத்தில் உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!