ஒபாமா சட்டை காலரில் லிப்ஸ்டிக்.... வாயை வச்சது யாரோ...?
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சட்டைக் காலரில் காணப்பட்ட லிப்ஸ்டிக் அடையாளத்தால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் ஒபாமாவே அதற்குக் காரணமானவர்களை கொண்டு வந்து நிறுத்தி விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் இந்தக் களேபரம் நடந்தது. வெள்ளை மாளிகையில், ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒபாமா கலந்து கொண்டார்.
அந்த விருந்து நிகழச்சியில் ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 300 பேருக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர். பலரிடம் ஒபாம் நெருங்கிச் சென்றும் கட்டிப்பிடித்தும் கை குலுக்கியும் அளவளாவினார்.
பின்னர் அவர் பேசுகையில் இவர்களின் அன்பில் நனைந்ததன் விளைவாக எனக்குக் கிடைத்த பரிசு இந்த லிப்ஸ்டிக் என்று தனது சட்டைக் காலரைக் காட்டி குறிப்பிட்டார். அப்போதுதான் பலரும் சட்டைக் காலரில் லிப்ஸ்டிக் அடையாளம் இருந்ததைப் பார்த்தனர்.
பின்னர் லிப்ஸ்டிக் கரைக்குக் காரணம் யார் என்பதையும் அவரே விளக்கினார். அவர் கூறுகையில், இதற்குக் காரணமானவர் யார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஜெஸ்ஸிகா சான்செஸ். ஜெஸ்ஸிகா அல்ல, அவரது அத்தை.எங்கே அவர்....இதோ இங்கே இருக்கிறார். இவர்தான், இவர்தான் இதற்குக் காரணம் என்று ஒபாமா ஜெஸ்ஸிகாவின் அத்தையைக் காட்டி கூறியபோது கூட்டத்தில் சிரிப்பு வெடித்தது.
இதை நான் ஆளைக் காட்டி சொல்கிறேன் என்றால், எனக்கும் மிஷலுக்கும் இதனால் சண்டை வந்து விடக் கூடாதே.. அதற்காகத்தான் என்று கூறி ஒபாமா நிறுத்தியபோது கூட்டத்தில் மேலும் சிரிப்பலை பரவியது.
ஜெஸ்ஸிகா, அமெரிக்கன் ஐடல் சீசன் 11ல் 2வது இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல வேளையாப் போச்சு போங்க.. இல்லாட்டி இன்னொரு 'கிளிண்டன் கதையை'அமெரிக்கக் குழந்தைகள் கேட்க நேரிட்டிருக்கும்..!!!!
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!