புதிய போப் தேர்வு: ஆயிரம் ஆண்டுகளின் பின் ஐரோப்பியர் அல்லாத ஒருவர்!
புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது, 76. போப் ஆண்டவர் பிரான்சிஸ்-1 என்று அழைக்கப்படுவார்.
புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க வாடிகனில் கூடிய கத்தோலிக்க மத கார்டினல்கள்களால், முதல் 3 சுற்று வாக்குப் பதிவில் புதிய போப் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக வாக்கெடுப்பு நடந்த சிஸ்டின் தேவாலய புகை போக்கியில் கரும்புகை வெளியானது.
கரும்புகை வெளியேறினால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என்று அர்த்தம்.
நேற்று நடந்த 4-வது சுற்று வாக்குப்பதிவில் புதிய போப் ஆண்டவராக ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். ஐரோப்பாவைச் சேராத ஒரு நபர் போப் ஆண்டவராக கிட்டத்தட்ட 1,300 ஆண்டுகள் கழித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் அர்ஜென்டினா தலைநகரான பொனஸ் ஏரஸ் தேவாலயத்தில் ஆர்ச் பிஷப்பாக இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டில் கார்டினல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை தெரியப்படுத்த புகைபோக்கில் வெண்புகை வெளியேற்றப்பட்டது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!