ஒரு நாளைக்கு மட்டும் ஐரோப்பாவில் ஒரு மில்லியன் மின்னல் தோன்றுகிறது: மக்களுக்கு எச்சரிக்கை
ஜேர்மனியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டில் இடி, மின்னல், புயல் மழையால் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்று புயல் கண்காணிப்பு அமைப்பான நவ்காஸ்ட் எச்சரித்துள்ளது.
இது குறித்து நவ்காஸ்ட்டின் தலைவரான ஹேன்ஸ பீட்டர் பெட்ஸ் கூறுகையில், ஒரு நாளைக்கு ஐரோப்பாவில் ஒரு மில்லியன் மின்னல் வானில் தோன்றுகிறது.
இதன் எண்ணிக்கை அதிகரிக்கா விட்டாலும், இதனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம், இந்த மின்னல்கள் முன்பை விட அதிகத் திறன் உடையதாக உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் மின்னல், வானில் பறக்கும் விமானங்களுக்கும், வெளியில் நடமாடும் மக்களுக்கும் மட்டுமல்லாமல், வீட்டுக்குள் இருப்பவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் என்று நவ்காஸ்ட் தெரிவித்துள்ளது.
இதற்கான காரணம் குறித்து கர்ல்ஸ்ருஹே கல்லூரியின் மைக்கேல் குன்ஸ் தெரிவித்த போது, தரையின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போவதால், ஈரப்பதமும் உயர்கின்றது. இந்த உயர்வு புயல் மழையைத் தரக்கூடிய மேகங்களை உருவாக்கும். இந்த ஈரப்பதம் அதிகரிக்க அதிகரிக்க புயலின் திறனும் வேகமும் அதிகரிக்கும், அபாயமும் அதிகரிக்கும் என்றார்.
மேலும் இந்த ஆண்டு தரையின் வெப்பம் அதிகரித்தால் அதிகம் பாதிக்கப்படுவது தென்மேற்கு ஜேர்மனி தான் என்றார்.
மின்னலால் ஏற்படும் பாதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 25% உயர்ந்துள்ளது. இப்போது இதன் மதிப்பு 500,000 யூரோவாகும். ஒரு வீட்டின் மீது மின்னல் பாய்ந்தால் வீட்டைப் புதுப்பிக்க சுமார் 800 யூரோ தேவைப்படுகிறது என்று ஜேர்மன் காப்பீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!