நாற்பது ஆண்டுகளாக நிலவில் கம்பீரமாய் நிற்கும் அமெரிக்க தேசிய கொடிகள்
அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கழித்தும், அவர்கள் அங்கே நட்டு வைத்த கொடிகள் இன்னும் சேதமடையாமல் பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் முதன் முதலாக நிலவில் கால் வைத்தனர்.
|
The flag planted by Apollo 17 astronauts in December 1972 -- the last manned mission to the moon -- is seen here in this image taken by the Lunar Reconnaissance Orbiter Camera |
|
இதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் 5 முறை நிலாவுக்கு சென்று வந்து விட்டனர். கடந்த 1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அப்போலோ 17 விண்கலத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றது தான் நிலவுக்கு அமெரிக்கர்கள் கடைசியாகச் சென்றதாகும்.
|
Astronauts in each of the six Apollo moon landings planted American flags in lunar soil. The Apollo 15 mission in 1971 is seen here |
|
இந்த 6 முறையும் தங்கள் பயணத்தின் நினைவாக விஞ்ஞானிகள் அமெரிக்க கொடியை நிலவில் நட்டு வைத்தனர்.
|
This is the flag planted by the Apollo 16 mission in April 192 |
|
அந்த கொடிகளில் நிலவுக்கு முதன் முதலாகச் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் நட்டுவைத்த கொடியைத் தவிர மற்ற 5 கொடிகள் நிலவின் தட்பவெட்பத்தையும் தாண்டி இத்தனை ஆண்டுகள் கழித்தும் பறந்து கொண்டிருக்கின்றன. நாசாவின் கமெரா எடுத்துள்ள புகைப்படத்தில் இந்த கொடிகள் பறப்பது தெளிவாகத் தெரிகிறது.
|
| Pete Conrad planted this flag on the Apollo 12 mission in November 1969 -- it is still standing |
|
தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறினாலும் இதுவரை அமெரிக்க விஞ்ஞானிகள் மட்டுமே நிலவில் கால் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!