Tuesday, July 31, 2012

பூமியை காப்பாற்ற துணி துவைக்க வேண்டாம்: மக்களுக்கு வேண்டுகோள்



பூமியை காப்பாற்ற துணி துவைக்க வேண்டாம்: மக்களுக்கு வேண்டுகோள்




பூமியை காப்பாற்றுவதற்கு அடிக்கடி நிறைய துணிகளை லாண்டரிக்கு போட வேண்டாம் என்று இங்கிலாந்தை சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் குவாங்கோ என்ற தொண்டு நிறுவனம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிறுவனத்துக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் பூமியை காப்பாற்ற அடிக்கடி லாண்டரிக்கு துணிகளை போட வேண்டாம்.வாஷிங் மெஷின்களில் துணி துவைப்பதை குறைப்பதன் மூலம் கார்பன் வாயு வெளியேறுவது கணிசமாக குறையும். அத்துடன் தண்ணீரும் நிறைய சேமிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிறுவனம் கூறுகையில், ஒருமுறை உடுத்திய உடையை மீண்டும் அணிய பலர் தயங்குகின்றனர். ஆனால் இங்கிலாந்தில் பத்து பேரில் 4 பேர் 2வது முறை அதே துணியை அணிகின்றனர்.

துணி துவைப்பதற்கு முன், இன்னொரு முறை அணிந்தால் என்ன என்று உண்மையிலேயே அவர்கள் நினைக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!