Wednesday, July 25, 2012

சனி கிரகத்தின் துணைக் கோள் பூமியை போன்றது: ஆய்வில் தகவல்


சனி கிரகத்தின் துணைக் கோள் பூமியை போன்றது: ஆய்வில் தகவல்





சனி கிரகத்தின் துணை கோளான டைட்டன் பூகோள ரீதியில்(Geology) பூமியை போன்றே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சனி கிரகத்தின் ஏராளமான துணைக் கோள்களில் மிகப் பெரியது டைட்டன் தான்.இந்தக் கோளில் பூமியைப் போன்றே ஏராளமான ஆறுகள் உள்ளன. ஆனால் அதில் நீருக்குப் பதில் திரவ நிலையில் மீத்தேன் தான் ஓடிக் கொண்டுள்ளது.

அதே போல சூரிய மண்டலத்தில் உள்ள பிற துணைக் கோள்கள், நிலாக்களில் காணப்படும் ஏராளமான கிரேட்டர்கள் எனப்படும் மேடு, பள்ளங்கள் இதில் இல்லை. விண்கற்கள் தாக்குதல்களால் ஏற்படும் இந்த மேடு, பள்ளங்கள் டைட்டனில் காணப்படாததற்குக் காரணம் இதுவரை தெரியாமல் இருந்தது.
ஆனால் பூமியைப் போன்று டைட்டனிலும் கண்டத் திட்டுகள் நகர்வு உள்ளிட்ட நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் இந்த மேடு, பள்ளங்கள் மறைந்து விடுவது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் டைட்டனின் புவியியல் தன்மை கிட்டத்தட்ட பூமியை ஒத்து இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!