Monday, July 23, 2012



49 கோடி டாலர் இழப்பு


26 ஆண்டில் முதல்முறையாக நஷ்டத்தில் மைக்ரோசாப்ட்




அமெரிக்க முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 26 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நஷ்டம் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.
உலக மகா பணக்காரர் பில்கேட்சின் நிறுவனம் மைக்ரோசாப்ட். கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்தது. 2007ம் ஆண்டில் 630 கோடி டாலருக்கு ஏக்வான்டிவ் என்ற ஆன்லைன் விளம்பர சேவை நிறுவனத்தை வாங்கியது.

மைக்ரோசாப்டின் போட்டி நிறுவனமான கூகுளின் விளம்பர வேகத்துக்கு மாற்றாக ஏக்வான்டிவ் இருக்கும் என்று கருதப்பட்டது.ஆனால், கூகுளுடன் அது போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. ஆன்லைன் விளம்பர சேவையில் கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஏக்வான்டிவ் கொள்முதலால் 4வது காலாண்டு நிதி நிலை அறிக்கையில் மைக்ரோசாப்ட் 49 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளது. 1986ம் ஆண்டு பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு மைக்ரோசாப்ட் முதல்முறையாக நஷ்டத்தை சந்தித்துள்ளது




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!