சூரியனிலிருந்து வெளியேறும் மிகப்பெரிய ஒளிப்பிரளயம்
பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சூரியன் உள்ளது.
சூரியனின் மத்தியப்பகுதியிலிருந்து கடந்த 7-ம் திகதியன்று மிகப்பெரிய அளவிலான ஒளிக்கற்றைகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. சூரியன் உமிழ்ந்த இந்த கிளரொளிக்காட்சிகளை நாசாவின் சோலார் டைனமிக் ஆய்வகம் வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர். 1944 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளரொளியானது கடந்த பத்து வருடங்களில் காணப்படாத மிகப்பெரிய ஒன்று என்றும் நாசா கூறியுள்ளது.
இந்த கிளரொளிக்காட்சியின் போது சக்தி வாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெடித்து சிதறுகின்றன. இவ்வாறு வெடித்து சிதறிவரும் மனிதனுக்கு தீங்கிழைக்கூடிய கதிர்வீச்சுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் நுழையமுடியாது.
ஆனால் இது பூமிக்கு அருகில் செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தகவல் தொடர்பு சாதனங்களையும், செயற்கை கோள்களுக்கும் தீங்கிழைக்கக்கூடும். மிகக்கடுமையான இந்த ஒளிப்பிரளயங்களை எக்ஸ் 1, 2, 3 என்று வகைப்படுத்துகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!