Friday, January 10, 2014

போராளி இயக்கம் கைப்பற்றிய டேங்கருக்குள் இருப்பது ஆயில் அல்ல, ராஜதந்திர சிக்கல்!

போராளி இயக்கம் கைப்பற்றிய டேங்கருக்குள் இருப்பது ஆயில் அல்ல, ராஜதந்திர சிக்கல்!




சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி இயக்கத்தினர், சிரியா ராணுவ முகாம் ஒன்றில் கைப்பற்றியதாக அறிவித்து, போட்டோ வெளியிட்டுள்ள ஆயில் 
லாரிக்குள் பெரிதாக ஏதுமில்லை. பெற்றோலோ, டீசலோ இருக்கலாம். அல்லது, காலி லாரியாகக்கூட இருக்கலாம். அது முக்கியமல்ல. லாரியில், அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு எண்ணை நிறுவனத்தின் லோகோ (logo) இருப்பதுதான், ராஜதந்திர ரீதியில் பெரிய விஷயம்!

அது எப்படி? இதோ, இப்படித்தான்:

சிரியா அரசுக்கு எதிராக ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. அதை சிரியாவின் சில நட்பு நாடுகள் டேங்கர் (லாரி), தம்முடையது அல்ல என அறிவித்துள்ளது, அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு எண்ணை நிறுவனம்.

போராளி இயக்கம் லாரி ஒன்றை கைப்பற்றியது பெரிய விஷயமா? அது ஒரு சாதனை என்பதுபோல போட்டோ வெளியிட வேண்டுமா? அப்படி வெளியிட்டாலும், உடனே மற்றொரு நாட்டின் அரசு எண்ணை நிறுவனம் அவசர மறுப்பு அறிக்கை வெளியிடும் அளவுக்கு இந்த ஒற்றை லாரியில் அப்படி என்னதான் உள்ளது?
ரகசியமாக மீறி, சில சப்ளைகளை செய்கின்றன. இந்த ரகசிய சப்ளை செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் உண்டு. சிரியாவுக்கு ரஷ்யாவும், வேறு சில நாடுகளும் செய்யும் சப்ளைகளை அம்பலப்படுத்தும் பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிரியாவில் அரசு ராணுவத்தை தாக்கும் போராளிப்படைகள், தாக்குதலில் வெற்றியடைந்து ஒரு ராணுவ முகாமை கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம், அந்த ராணுவ முகாமில் உள்ள ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, முகாமை வெடிவைத்து தகர்த்து விடுவார்கள். ராணுவம் மீண்டும் அந்தப் பகுதியை கைப்பற்றினால், அவர்கள் நிலைகொள்வதற்கு ராணுவ முகாம் பில்டிங் இருக்கக்கூடாது என்பதற்காக அப்படி செய்தார்கள்.

இப்போது கதை வேறு. ராணுவ முகாமை கைப்பற்றியவுடன், ஆயுதங்களை எடுப்பதற்கு முன், முகாமுக்குள் உள்ள இதர பொருட்கள் எந்த நாட்டு தயாரிப்பு என்று பார்க்கிறார்கள். அந்தப் பொருட்கள் மற்றொரு அரசால் சப்ளை செய்யப்பட்டவை என்பதற்கு ஆதாரம் ஏதாவது கிடைத்தால், உடனே போட்டோ எடுத்து வெளியிட்டு விடுகிறார்கள்.

“இதோ பாருங்கள். ஐ.நா.வின் பொருளாதாரத்தடை இருக்கையில், இந்த நாடு ரகசியமாக சிரியா அரசுக்கு சப்ளை செய்கிறது” என்று காட்டுவதுதான், போட்டோ வெளியிடுவதன் நோக்கம். இதையடுத்து அந்த நாட்டுக்கு ராஜதந்திர ரீதியில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கும். ஐ.நா. காரணம் கேட்கும்.

இப்படி செய்வதால், இனிவரும் நாட்களில் சிரியாவுக்கு எந்த சப்ளையும் செய்ய மற்றைய நாடுகள் தயங்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம்.

இரு தினங்களுக்கு முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸின் புறநகரப் பகுதியில் உள்ள சிறிய ராணுவ முகாம் ஒன்று போராளிப் படையினரால் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த சொற்ப அளவிலான ராணுவத்தினரில் சிலர் கொல்லப்பட்டனர். வேறு சிலரோ, போட்டது போட்டபடி முகாமை விட்டு தப்பியோடினர்.

முகாமை கைப்பற்றிய போராளிப் படையினர் முகாமில் இருந்த பொருட்களை சோதனையிட்டபோது, முகாமுக்கான எரிபொருள் சப்ளை செய்த ஆயில் டேங்கர் லாரி ஒன்றை கண்டார்கள். அதன் பின்பகுதியில், அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு எண்ணை நிறுவனத்தின் லோகோ இருந்தது (பார்க்கவும் போட்டோ).

இதுதான், இந்த போட்டோவின் ராஜதந்திர முக்கியத்துவம்.

போட்டோ வெளியானதும் பதறிப்போன அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு, அந்த டேங்கர் தம்முடையது அல்ல என அவசர அவசரமாக அறிவித்த காரணம் அதுதான்.

அஸர்பாய்ஜான் குடியரசு அரசின் செய்தி தொடர்பாளர் நிஜாமிடின் குலியேவ் உடனடியாக செய்தியாளர் மாநாடு ஒன்றைக் கூட்டி, “எமது அரசு எண்ணை நிறுவனமான சொகார் (SOCAR), சிரியாவுக்குள் எந்த ஆபரேஷனிலும் இல்லை. அந்த நிறுவனத்துக்கு, சிரியா அரசுடன் எந்த வர்த்தகமும் இல்லை. போட்டோவில் உள்ளது, சொகார் நிறுவனத்தின் டேங்கர் லாரியும் அல்ல” என்று நேற்று அறிவித்தார்.

“அந்த ஆயில் டேங்கரில், சொகார் நிறுவனத்தின் லோகோ உள்ளதே” என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “அந்த லோகோ போலியாக வரையப்பட்டுள்ளது. எமது நாட்டை அரசியல் ரீதியாக சிக்கலில் மாட்டிவிட சிரியாவில் உள்ள போராளி அமைப்பினர் செய்த சதிச்செயல் இது” என்று தெரிவித்துள்ளார்.

”லோகோ போலியானது என்பதற்கு உங்களிடம் நிரூபணம் ஏதாவது உள்ளதா?” என மற்றொரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “எமது நிபுணர்கள் இரு லோகோவையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கப்பட்டபின், ஆதாரத்தை வெளியிடுவோம்” என்றார்.

சிரியா போராளி இயக்கங்களில் கூட்டமைப்பான பிரீ சிரியன் ஆர்மியின் செய்தி தொடர்பாளர், “ஆயில் டேங்கரில் லோகோ வரைவது எமது போராளிகளின் பணியல்ல. நாம் கைப்பற்றிய டேங்கர் லாரி, இந்த லோகோ சகிதம் இருந்தது என்பதே நிஜம்” என்று தெரிவித்துள்ளார்.

சரி. அஸர்பாய்ஜான் குடியரசு அரசின் செய்தி தொடர்பாளர் நிஜாமிடின் குலியேவ், “அசலுக்கும் நகலுக்கும் உள்ள வித்தியாசத்தை எமது நிபுணர்கள் கண்டு பிடித்தபின் தாரம் தருகிறோம்” என்கிறாரே… வித்தியாசத்தை கண்டுபிடிக்காமல், அது போலி லோகோ என்று எப்படி அடித்துச் சொல்கிறார்?


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!