Friday, November 29, 2013

உலகெங்கும் உள்ள தமிழாசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

உலகெங்கும் உள்ள தமிழாசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு


உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தமிழ் மொழியை கற்பித்து வரும் தமிழாசிரியர்களின் நலன் கருதி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஒரு டிப்ளோமா கற்கை நெறியை தமிழ் நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஆரம்பித்துள்ளது.

உலகெங்கும் தமிழ் கற்பித்தலில் ஆர்வமுடைய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் ஆகியோர் மேற்படி கற்கை நெறியில் உடனடியாக இணைந்து எதிர்காலத்தில் ஒரு தகுதி வாய்ந்த தமிழாசிரியராகும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்தது முன்னெடுக்கும் அரிய வாய்ப்பு இது.முழுக்க முழுக்க புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ச்சிறார்கள், தமிழ்க் கல்வியை இலகுவாக பயிலவும், தமிழைப் பிழையின்றி பேசவும், படிக்கவும், எழுதவும் இப்பாடநெறி உதவும்.

அடிப்படை தமிழ் இலக்கணம், மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறு அத்துடன் கணனித் தமிழும், இணைய வழிக் கல்வியும் முக்கிய விடயமாகும்.

மேற்படி டிப்ளோமா கற்கை நெறியில் இணைந்து கொள்ளுவதற்கு தேவையான தகைமைகள் பின்வருமாறு அமைகின்றன.

இலங்கையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் இந்தப் பாடத்திட்டத்தில் நீங்கள் இணையலாம்.

முழுக்க முழுக்க புதிதாக எழுதப்பட்ட பாடத்திட்டம். புலம் பெயர் சமூகத்தில் வாழும் தமிழ்ச் சிறார்கள் இரண்டாவது, மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை படிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் இலகுவாக படிப்பதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட முதலாவது பாடத்திட்டம்.

இந்த கற்கை நெறியை படித்து முடிப்பவர்கள் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். தற்போது இலங்கை, இந்தியாவில் இருப்பவர்களும் இப்பயிற்சி நெறியை ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த டிப்ளோமா கற்கை நெறியில் சேர ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை விண்ணப்பிக்குமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!