முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று தெரியுமா?
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆண்டு வருமானம் பற்றி பலருக்கு தெரியும். காலாண்டு வருமானம் பற்றி கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு.
இந்நிலையில் அந்த நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.
பிளாக்பெர்ரி நிறுவனம் நொடிக்கு ரூ.12,797 வருமானம் ஈட்டுகிறது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மத்தியிலும் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விநாடிக்கு ரூ.14,360 சம்பாதிக்கிறது.
செல்போன் தயாரிப்பாளரான நோக்கியா விநாடிக்கு ரூ. 58,754 வருவாய் பெறுகிறது.
ஐடி ஜாம்பவானான ஆரக்கிள் நிறுவனத்தின் ஒரு நொடிக்கான வருவாய் ரூ.66,685 ஆகும்.
பிரபல லேப்டாப், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 447 வருவாய் ஈட்டுகிறது.
எதற்கெடுத்தாலும் மக்கள் கூகுள் கூகுள் செய்து பார்க்கிறார்கள். அந்த கூகுள் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 941 சம்பாதிக்கிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நொடிக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 663 வருவாய் பெறுகிறது.
மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனம் என்றாலும் அந்த பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருபவர் என்னவோ அதன் நிறுவனர் பில் கேட்ஸ் தான். மைக்ரோசாப்ட் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 589 வருவாய் ஈட்டுகிறது.
ஹ்யூலெட் பேக்கார்ட் நிறுவனத்தின் ஒரு நொடி வருவாய் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 52 ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் மக்களிடையே பிரபலமான ஒன்று. அதன் ஒரு நொடி வருமானம் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 572 ஆகும்.
ஆப்பிள் என்றால் சாம்சங் பெயரை கூறாமல் இருக்க முடியுமா. சாம்சங் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 158 சம்பாதிக்கிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!