நம் கையில் உள்ள மெளஸைக் கண்டுபிடித்த டக்ளஸ் 88 வயதில் மரணம்!
கம்ப்யூட்டருடன் இணை பிரியாத துணைவனாக திகழும் மெளஸைக் கண்டுபிடித்தவரான அமெரிக்காவைச் சேர்ந்த டக்ளஸ், எங்கல்பர்ட் சான்பிரான்சிஸ்கோவில் மரணமடைந்தார் நேற்று இரவு தனது வீட்டில் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எங்கல்பர்ட்டுக்கு வயது 88 ஆகிறது. கம்ப்யூட்டர்களால் கூட மறக்க முடியாத டக்ளஸ்
கம்ப்யூட்டர்களால் கூட மறக்க முடியாத டக்ளஸ் கம்ப்யூட்டர் துறையில் பல மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் டோக் என்று செல்லமாக அழைக்கப்படும் டக்ளஸ்
முதல் மெளஸின் முன்னோடி எஸ்ஆர்ஐ என்று அழைக்கப்படும் ஸ்டான்போர்ட் ஆய்வுக் கழகத்தில் இவர் ஆற்றிய பணிகள்தான் 1963ம் ஆண்டு முதல் மெளஸை இவர் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது.
68ல் முதல் மெளஸ் அறிமுகம் 1968ம்ஆண்டு முதல் மெளஸை உலகுக்கு அறிமுகப்படுத்தி பேசினார் டக்ளஸ். அந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்ப்யூட்டர் பயன்பாடு எளிதானது மெளஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் கம்ப்யூடட்ர் பயன்பாடு எளிதானது, வேகமாக பரவவும் வகை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கல்பர்ட்டுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். அவருடன் 47 ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினார் டோக். இரண்டாவது மனைவி பெயர் கரேன். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!